ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்வது எப்படி?

கத்தரிக்காயைக் கொண்டு செய்யப்படும் சைடிஷ் வகைகளுள் ஸ்டஃப்டு கத்தரிக்காய் குறிப்பிடத்தக்கது.

கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட‌ இதனை விரும்பி உண்பர். அவ்வளவு சுவை மிகுந்தது. எங்கள் ஊரில் இதனை மூட்டுக் கத்தரிக்காய் என்று அழைப்பர்.

எளிமையான சுவையான ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பிஞ்சு கத்தரிக்காய் – ¼ கிலோ கிராம்

 

ம‌சால் அரைக்க

சின்ன வெங்காயம் – 5 எண்ணம் (மீடியம் சைஸ்)

தேங்காய் – ¼ மூடி (மீடியம் சைஸ்)

மல்லிப் பொடி – 1 ஸ்பூன்

வத்தல் பொடி – ¾ ஸ்பூன்

சீரகப் பொடி – ½ ஸ்பூன்

ம‌ஞ்சள் பொடி – ½ ஸ்பூன்

க‌ல் உப்பு – தேவையான அளவு

 

தாளிக்க

நல்ல எண்ணெய் – 6 ஸ்பூன்

க‌டுகு – ½ ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்

சின்ன வெங்காயம்   – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)

கறிவேப்பிலை – 3 கீற்று

 

செய்முறை

கத்தரிக்காயில் காம்பின் நீளமான பகுதியை மட்டும் வெட்டி நீக்கவும்.

காம்பு நீக்கப்பட்ட கத்தரிக்காய்
காம்பு நீக்கப்பட்ட கத்தரிக்காய்

 

கத்தரிக்காயை ஆறுபகுதியாக நீளத்தில் முக்கால் பகுதி வரை கீறி வைக்கவும்.

வெட்டி வைத்த கத்தரிக்காய்
வெட்டி வைத்த கத்தரிக்காய்

 

மசாலுக்குத் தேவையான சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும்.

தாளிக்க வேண்டிய சின்ன வெங்காயத்தை தோலுரித்து சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

கறிவேப்பிலையை அலசி உருவி வைக்கவும்.

மிக்ஸியில் மல்லிப் பொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி, தேவையான அளவு கல் உப்பு, துருவிய தேங்காய், தோலுரித்த வெங்காயம், தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக மசால் அரைக்கவும்.

மசால்
மசால்

 

கீறி வைத்துள்ள கத்தரிக்காயில் மசாலை ஸ்டஃப் செய்யவும்.

கத்தரிக்காயில் மசால் வைக்கும்போது
கத்தரிக்காயில் மசால் வைக்கும்போது

 

இவ்வாறு எல்லா கத்தரிக்காய்களிலும் மசாலை ஸ்டஃப் செய்யவும்.

மசால் வைத்த கத்தரிக்காய்கள்
மசால் வைத்த கத்தரிக்காய்கள்

 

சிறிது மசால் மீந்துவிடும்.

வாயகன்ற பாத்திரத்தில் நல்ல எண்ணெய், கடுகு, உளுந்தம்பருப்பு, சதுரங்களாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிக்கும்போது
தாளிக்கும்போது

 

பின் அதனுடன் மீந்துள்ள மசாலாக் கலவைச் சேர்த்து மூன்று குழிக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும்.

மசால் ஊற்றியதும்
மசால் ஊற்றியதும்

 

மசாலாக் கலவையில் ஸ்டஃப் செய்து வைத்துள்ள கத்தரிக்காய்களைச் சேர்க்கவும்.

கத்தரிக்காய் போட்டதும்
கத்தரிக்காய் போட்டதும்

 

அடுப்பினை சிம்மில் வைக்கவும். பாத்திரத்தை தட்டினால் மூடி விடவும்.

ஓரிரு நிமிடங்களில் தட்டினைத் திறந்து கத்தரிக்காய்களை லேசாக பிரட்டி விடவும்.

கத்தரிக்காய் பாதி வெந்ததும்
கத்தரிக்காய் பாதி வெந்ததும்

 

மசாலிருந்து தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பினை அணைத்து விடவும்.

கத்தரிக்காய் வெந்து நிறம் மாறி இருப்பதைக் காணலாம்.

கத்தரிக்காய் நன்கு வெந்ததும்
கத்தரிக்காய் நன்கு வெந்ததும்

 

சுவையான ஸ்டஃப்டு கத்தரிக்காய் தயார்.

சுவையான ஸ்டஃப்டு கத்தரிக்காய்
சுவையான ஸ்டஃப்டு கத்தரிக்காய்

 

இதனை எல்லா வகையான சாத வகைகளுடனும் சேர்த்து உண்ணலாம்.

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மல்லிப் பொடி, மிளகாய் பொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றிற்கு பதிலாக 2¼ ஸ்பூன் மசாலா பொடி சேர்த்து ஸ்டஃப்டு கத்தரிக்காய் தயார் செய்யலாம்.

ஸ்டஃப்டு கத்தரிக்காய்க்கு மிகவும் பிஞ்சான, விதையில்லாத சிறிய கத்தரிக்காய்களைத் தேர்வு செய்யவும்.

கத்தரிக்காயைக் கீறும்போது காயின் உள்ளே சொத்தையோ, புழுவோ இல்லாததை உறுதி செய்து செய்முறையை தொடரவும்.

ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்யும்போது அடுப்பு சிம்மில் இருப்பது அவசியம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.