ஐயப்பன் பாடல்கள்

ஐயப்பன் பாடல்கள் தொகுப்பு. எளிய மக்கள் பலரை ஆன்மிக பயணம் மேற்கொள்ள வைத்த கடவுள் ஐயப்பன். அவரைப் போற்றிப் பாடும் பாடல்கள் இவை.

1. பகவான் சரணம் பகவதி சரணம்

பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா

அகமும் குளிரவே அழைத்திடுவோமே
சரணம் சரணம் ஐயப்பா
பகலும் இரவும் உன் நாமமே
சரணம் சரணம் ஐயப்பா

கரிமலை வாசா பாபவினாசா
சரணம் சரணம் ஐயப்பா
கருத்தினில் வருவாய் கருணையைப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா

மஹி சம்ஹாரா மதகஜ வாகனா
சரணம் சரணம் ஐயப்பா
சுகுண விலாசா சுந்தர ரூபா
சரணம் சரணம் ஐயப்பா

ஆறுவாரமே நோன்பிருந்தோம்
பேரழகா உன்னைக் காண வந்தோம்
பால் அபிஷேகம் உனக்கப்பா
பாலனைக் கடைக்கண் பாரப்பா

முத்திரை தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எனக்கப்பா
கற்பூர தீபம் உனக்கப்பா-உன்
பொற்பத மலர்கள் எனக்கப்பா

தேவன் பாதம் தேவி பாதம்
சேவடி சரணம் ஐயப்பா
நாவினில் தருவாய் கீதமப்பா
தேவை உன் திருப்பாதமப்பா

நெய்யபிஷேகம் உனக்கப்பா-உன்
திவ்ய தரிசனம் எமக்கப்பா
தையினில் வருவோம் ஐயப்பா-அருள்
செய்யப்பா மனம் வையப்பா

பகவான் சரணம் பகவதி சரணம்
பகவானே பகவதியே
தேவனே தேவியே
ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம்

 

2. ஐயன் பவனி வருதல்

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

பவனி வாராரிங்கே சுவாமி சரணம் ஐயப்பா
வாவர் சுவாமி கூட வாரார் சரணம் ஐயப்பா
காவலர்கள் கூட வாரார் சரணம் ஐயப்பா
ஆவலோடு கூப்பிடுவோம் சரணம் ஐயப்பா

அம்பும் வில்லும் கையிலேந்தி சுவாமி வருகிறார்
எம்பெருமான் துள்ளித் துள்ளி ஆடிவருகிறார்
துன்பமெலாம் தீர்த்திடவே பவனி வருகிறார்
இன்பமொடு கும்பிடுவோம் சரணம் ஐயப்பா

தந்தை தாயுமான சுவாமி பவனி வருகிறார்
வேதியர் சபை நடுவே சுவாமி வருகிறார்
வேதியர் சபை நடுவே சுவாமி வருகிறார்
பூதப்படைகளுடனே ஐயன் வருகிறார்
இத்தருணம் காத்திடுவாய் சரணம் ஐயப்பா

கடகடவென பேரிமுழுங்க சுவாமி பவனி வருகிறார்
கொட்டு வாத்தியம் முழங்கிடவே ஐயன் வருகிறார்
மாடன் சடையன் பொருளன் இருளன் சரணம் ஐயப்பா!
ஓடிவாரார் பவனி வாரார் சரணம் ஐயப்பா

மின்னல்போல் ஒளிவிளங்க சரணம் ஐயப்பா
பொன்னுமேனி கண்டிடவே சரணம் ஐயப்பா
தனிச்சிலம்பும் சல்லடையும் சுவாமி ஐயப்பா
கணகணவென சலங்கை குலுங்க பவனி வருகிறார்

பிள்ளைக்குறையால் உள்ளம் நொந்து வருந்தும் பக்தரை
உள்ளமிரங்கி கருணை காட்டி பாரும் ஐயப்பா
வள்ளலென்று பெயர் விளங்கும் எங்கள் ஐயப்பா
அள்ளி அள்ளி ஏகிடுவாய் செல்வக்குவியலை

கடும்பிணியின் கொடுமையினால் வருந்தும் அன்பரை
நொடிப்பொழுதில் பிணியகற்றி காத்தருள் அய்யா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

 

3. இருமுடி தாங்கி

இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்
இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும்
திருவடியைக் காண வந்தோம்.

பல்லவி

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே ஐயப்போ, ஐயப்போ சாமியே
நெய்யபிஷேகம் சுவாமிக்கே கற்பூரதீபம் சுவாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூடிக்கொண்டு
ஐயனை நாடிச் சென்றிடுவார்
சபரி மலைக்கே சென்றிடுவார்

அனுபல்லவி

கார்த்திகை மாதம் மாலையணிந்து
நேர்த்தியாகவே விரதமிருந்து
பார்த்தசாரதியின் மைந்தனே உனைப்
பார்க்க வேண்டியே தவமிருந்து

இருமுடி எடுத்து எரிமேலி வந்து
ஒரு மனதாகிப் பேட்டை துள்ளி
அருமை நண்பராம் வாவரைத் தொழுது
ஐயனின் அருள்மலை ஏறிடுவார்

அழுதை ஏற்றம் ஏறும்போது
அரிஹரன் மகனை துதித்துச் செல்வார்
வழிகாட்டிடவே வந்திடுவார் ஐயன்
வன்புலி ஏறி வந்திடுவார்

கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
கருணைக் கடலும் துணை வருவார்
கரிமலை இரக்கம் வந்தவுடனே
பெருநதி பம்பை கண்டிடுவார்

கங்கை நதிபோல் புண்ணிய நதியாம்
பம்பையில் நீராடி சங்கரன் மகனைக் கும்பிடுவோர்
சஞ்சலமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருட் காவலனாயிருப்பார்

தேக பலம்தா என்றால்
அவர் தன் தேகத்தை தந்திடுவார்
பாதபலம் தா என்றா அவர்
தன் பாதத்தை தந்திடுவார் – நல்ல
பாதையைக் காட்டிடுவார்

சபரீ பீடமே வந்திடுவார்
சபரி அன்னையைப் பணிந்திடுவார்
சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரிமலை தனை நெருங்கிடுவார்
பதினெட்டு படி மீதும் ஏறிடுவார்
கதி யென்றவனைச் சரணடைவார்
மதிமுகம் கண்டே மயங்கிடுவார்
துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார்

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சாமியே ஐயப்பா சாமியே ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்போ சாமி சரணம் ஐயப்போ

 

4. வழிநடை சிந்து

சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
சபரிமலைக்கு பள்ளிக்கட்டு

கற்பூரஜோதி சுவாமிக்கே
சுவாமிக்கே கற்பூரஜோதி

பகவானே பகவதியே பகவதியே பகவானே
தேவனே தேவியே தேவியே தேவனே

ஐயப்ப பாதம் சாமி பாதம்
சாமி பாதம் ஐயப்ப பாதம்

பாதபலம்தா தேகபலம்தா
தேகபலம்தா பாதபலம்தா

வில்லாளி வீரனே வீரமணி கண்டனே
வீரமணி கண்டனே வில்லாளி வீரனே

பகவான் சரணம் பகவதி சரணம்
பகவதி சரணம் பகவான் சரணம்

தேவன் சரணம் தேவி சரணம்
தேவி சரணம் தேவன் சரணம்

தாங்கி விடப்பா ஏந்தி விடப்பா
ஏந்தி விடப்பா தாங்கி விடப்பா

தூக்கி விடப்பா ஏற்றம் கடினம்
ஏற்றம் கடினம் தூக்கி விடப்பா

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை கல்லும் முள்ளும்

நெய் அபிஷேகம் சுவாமிக்கே
சுவாமிக்கே நெய் அபிஷேகம்

 

உள்ளம் உருக்கும் ஐயப்பன் பாடல்கள் பாடுவோம். மகிழ்ச்சியில் திளைப்போம்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.