சர்க்கரை நோய் பரிசோதனை

சர்க்கரை என்பது தினமும் பல சிறுசிறு காரணங்களால் அதிகமாகவும், குறையவும் கூடும். இந்த அன்றாட வேறுபாட்டை நடைமுறையில் உணர முடியாது. எனவே பரிசோதனை மிக முக்கியமானது.

குறிப்பிட்ட காலங்களில் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் ஏதேனும் உறுப்புகள் அதிக சர்க்கரையினால் பாதிக்கப்பட்டுள்ளனவா எனக் கண்டறிந்து அதற்குத் தகுந்த சிகிச்சை மேற்கொள்ளலாம்.

தினமும்

சுயரத்திப் பரிசோதனை கருவி வைத்திருப்பவர்கள் தினமும் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

மாதம் ஒரு முறை

ஆகாரத்திற்கு முன் இரத்தத்தில் சர்க்கரை (Fasting Blood Sugar)

சாப்பிட்டு 2 மணி நேரத்திற்குப் பின் (Post Prandial Blood Sugar)

3 மாதத்திற்கு ஒரு முறை

மூன்று மாத சர்க்கரை கட்டுப்பாட்டை அறியும் HbA1 C பரிசோதனை

வருடம் ஒரு முறை

கண் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, E.C.G, மார்பு X-Ray, இரத்தத்தில் கொழுப்பு பரிசோதனை (Cholesterol Triglycerides), இரத்தக் குழாய் பரிசோதனை (Doppler Study), நரம்பு பரிசோதனை, மைக்கரால் டெஸ்ட் / ACR.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.