சொற்கள்

சொற்களை அம்பாக்கி எய்திடனும் – அது

சேருமிடம் வெற்றிகளைத் தந்திடனும்

சுற்றிநம்ம வாழ்வினை மாற்றிடனும் – அதில்

சோகங்களை தொலைத்தே போக்கிடனும்

 

வற்றாத நல்லருவி பாய்வதைப்போல – பேசும்

வார்த்தைகளில் தூய்மையினை காத்திடனும்

குற்றமின்றி மண்ணில்மழை பெய்வதைப் போல்

கூறும்சொற்கள் பிறருக்கு நன்மைதரனும்

 

உற்றாரோ மற்றாரோ பேதங்களின்றி – இனி

உறவென மெய்படத்தான் சொல்லைத் தரனும்

நற்றாயும் பிள்ளைநலன் காத்திடல்போல் -பிறர்

நலன்பெற நல்லசொல்லை பேசிடவேணும்

 

ஒற்றைச்சொல்லாய் ராமன் சொன்ன ஐவரானோம் -என்ற

ஒன்றேதான் வெற்றிக்கே விதையாச்சு

சிற்றறிவில் பாஞ்சாலி குருடர்களோ –என

சொன்ன சொல்லே குலத்தையே அழிக்கலாச்சு

 

கற்றுக்கொள்ள வேண்டும் நாம் நல்லசொற்களை

காலம்முழுதும் நன்மைதந்து காத்துநிற்குமே

அற்றம் காக்கும் கருவியாய் நல்லசொற்களை

அறிந்திடச் செய்தே நாம் வாழணும்

இராசபாளையம் முருகேசன்     கைபேசி: 9865802942

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.