பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி?

பருப்பு உருண்டை குழம்பு அருமையான குழம்பு வகை ஆகும். இக்குழம்பினை சாதத்தில் ஊற்றி உண்ணும் போது தனியாக பொரியலோ, கூட்டோ செய்யத் தேவை இல்லை. இதில் உள்ள பருப்பு உருண்டைகளையே தொட்டுக்கறியாக உண்ணலாம்.

இனி எளிமையான, சுவையான பருப்பு உருண்டை குழம்பு செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்

குழம்புக்கு

சின்ன வெங்காயம் – 100 கிராம்

தக்காளி – 1 பெரியது

வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது)

மல்லி இலை – 1/2 கொத்து

உப்பு – தேவையான அளவு

பருப்பு உருண்டை தயார் செய்ய

கடலை பருப்பு – 200 கிராம்

இஞ்சி – சுண்டு விரல் அளவு

சின்ன வெங்காயம் – 10 எண்ணம்

கறிவேப்பிலை – 3 கீற்று

மிளகாய் வற்றல் – 2 எண்ணம்

பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்

சீரகம் – 1/2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மசால் தயார் செய்ய

தேங்காய் – 1/4 மூடி (பெரியது)

மசாலா பொடி – 2 1/2 ஸ்பூன்

மல்லி பொடி – 1 ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 2 எண்ணம்

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்

கடுகு – 1/4 ஸ்பூன்

சீரகம் – 1/4 ஸ்பூன்

வெந்தயம் – 1/4 ஸ்பூன்

பெருஞ்சீரகம் – 1/4 ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

 

செய்முறை

கடலைப் பருப்பினை அலசி தண்ணீரில் 4 மணி நேரம் ஊற விடவும்.

பருப்பில் தண்ணீர் சற்று அதிகளவு ஊற்றி ஊற வைக்கவும். ஏனெனில் பருப்பு ஊறும்போது தண்ணீரை உறிஞ்சும்.

 

கடலைப்பருப்பு ஊறும் போது
கடலைப்பருப்பு ஊறும் போது

 

ஊறிய பருப்பின் தண்ணீரை தனியே எடுத்து வைக்கவும்.

குழம்பு வைக்கும் போது பருப்பு ஊறிய தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பருப்பினை வடிதட்டில் போட்டு தண்ணீர் இல்லாமல் நன்கு வடித்து விடவும்.

 

வடிகட்டிய கடலைப் பருப்பு
வடிகட்டிய கடலைப் பருப்பு

 

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

இஞ்சி, வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

மல்லி இலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை சிறிதளவு தண்ணீரில் ஊற வைக்கவும்.

மிளகாய் வற்றலை காம்பு நீக்கிக் கொள்ளவும்.

மிக்ஸியில் உருண்டை தயார் செய்ய தேவையான பெருஞ்சீரகம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து (தண்ணீர் சேர்க்காமல்) கொர கொரவென அடித்துக் கொள்ளவும்.

 

மிக்சியில் அரைக்கப்பட்ட பெருஞ்சீரகக் கலவை
மிக்சியில் அரைக்கப்பட்ட பெருஞ்சீரகக் கலவை

 

அத்துடன் ஊற வைத்துள்ள கடலைப் பருப்பினை சேர்த்து கொர கொரவென அடித்துக் கொள்ளவும். சுமார் 70-80 சதவீதம் அரைத்துக் கொண்டால் போதுமானது.

 

கடலைப் பருப்பினைச் சேர்த்து அரைத்ததும்
கடலைப் பருப்பினைச் சேர்த்து அரைத்ததும்

 

ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவையைக் கொட்டி அதனுடன் சதுரமாக்கிய சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து ஒருசேரக் கலந்து சிறிய உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.

 

சின்ன வெங்காயம், உப்பு சேர்த்ததும்
சின்ன வெங்காயம், உப்பு சேர்த்ததும்

 

 

உருண்டையாகத் திரட்டும் போது
உருண்டையாகத் திரட்டும் போது

 

 

உருண்டைகளாகத் திரட்டியதும்
உருண்டைகளாகத் திரட்டியதும்

 

உருண்டையை அழுத்தியோ, தளர்வாகவோ பிடிக்கக் கூடாது. அழுத்திப் பிடித்தால் உருண்டைக்குள் மசாலா சேராது இறுகிக் கொள்ளவும். தளர்வாக இருந்தால் உருண்டை கரைந்து விடும். ஆதலால் கவனமாக உருண்டையை தயார் செய்யவும்.

மிக்ஸியில் தேங்காய், ஊற வைத்த புளி, மசாலா பொடி, மல்லி பொடி, தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் இரண்டு சின்ன வெங்காயத்தை சேர்த்து லேசாக அரைத்து மசாலா தயார் செய்யவும்.

வாயகன்ற பாத்திரத்தில் நல்ல எண்ணெய், கடுகு, வெந்தயம், சீரகம், பெருஞ்சீரகம் சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

பின்னர் அதனுடன் சதுரமாக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

 

வெங்காயத்தைச் சேர்த்ததும்
வெங்காயத்தைச் சேர்த்ததும்

 

வெங்காயம் கால் பாகம் வதங்கியதும் வெள்ளைப் பூண்டினைச் சேர்த்து வதக்கவும்.

 

வெள்ளைப்பூண்டினைச் சேர்த்ததும்
வெள்ளைப்பூண்டினைச் சேர்த்ததும்

 

வெங்காயம் கண்ணாடிப் பதத்திற்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து, மசியும் அளவிற்கு வதக்கி, அதனுடன் மசாலாவைச் சேர்த்து, தேவையான தண்ணீர் (பருப்பு ஊற வைத்த தண்ணீர்) சேர்த்து கொதிக்க விடவும்.

 

தக்காளியைச் சேர்த்ததும்
தக்காளியைச் சேர்த்ததும்

 

 

மசாலாவைச் சேர்த்ததும்
மசாலாவைச் சேர்த்ததும்

 

ஒருகொதி வந்ததும் அடுப்பினை சிம்மிற்கும் சற்றுகூட வைத்து, குழம்பில் உருண்டைகளை இடைவெளி விட்டுச் சேர்க்கவும்.

 

குழம்பு கொதிக்கும் போது
குழம்பு கொதிக்கும் போது

 

உருண்டைகளைச் சேர்க்கும் போது
உருண்டைகளைச் சேர்க்கும் போது

 

உருண்டைகளைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து பாத்திரத்தை அடுப்பிலிருந்து தூக்கி லேசாக சுற்றிவிட்டு, அடுப்பில் வைத்து மூடி போடவும். இதனால் உருண்டைகள் உடையாது முழுவதும் குழம்பில் மூழ்கி நன்கு வேகும்.

ஏழு நிமிடங்கள் கழித்து அடுப்பினை அணைத்து விடவும்.

பின்னர் நறுக்கிய கொத்த மல்லி இலையை தூவி லேசாக கலந்து விடவும்.

 

மல்லி இலை சேர்த்ததும்
மல்லி இலை சேர்த்ததும்

 

சுவையான பருப்பு உருண்டை குழம்பு தயார்.

 

பருப்பு உருண்டை குழம்பு
பருப்பு உருண்டை குழம்பு

குறிப்பு

உருண்டைகளைச் சேர்க்கும் முன்னர் குழம்பில் தண்ணீர் சற்று அதிகம் இருக்குமாறு சேர்க்கவும். ஏனெனில் உருண்டை குழம்பினை உறிஞ்சும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.