பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2020

பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2020 பட்டியலில், முதல் 100 இடங்களில், தமிழ்நாட்டினைச் சார்ந்த 18 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.

மத்திய அரசு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசை செய்து, 11.06.2020 அன்று பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தினை, சர்வதேச அளவில் உயர்த்துவதே இதன் நோக்கம் ஆகும்.

கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்ற அடிப்படையில், ஒவ்வொரு வருடமும் தரவரிசை தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.

2020-ஆம் வெளியிடப்பட்ட பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில், இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களுரு 84.18 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடெல்லி 70.16 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

பனாராஸ் இந்து பல்கலைக்கழகம், கொல்கத்தா தரவரிசையில் 63.15 மதிப்பெண்களைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2020

வரிசை எண் பெயர் மதிப்பெண் இடம்
1 அமிர்தா விஸ்வ வித்யா பீடம், கோயம்புத்தூர் 62.27 4
2 அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 58.71 12
3 பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் 58.30 13
4 வேலூர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, வேலூர் 55.22 16
5 சென்னை பல்கலைக்கழகம், சென்னை 52.55 22
6 சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அகாடமி (சாஸ்திரா), தஞ்சாவூர் 52.22  25
7 ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை 51.32 28
8 எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 50.07 35
9 அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி 49.22 36
10 சத்திய பாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 48.77 39
11 சவிதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 48.56 42
12 பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி 46.41 53
13 பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை 45.67 59
14 மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை 45.58 60
15 கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையம், திருவில்லிபுத்தூர் 42.57 72
16 பெரியார் பல்கலைக்கழகம், சேலம் 41.09 83
17 காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம், காந்தி கிராமம் 40.65 91
18 செட்டிநாடு அகாடமி ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாதமி 39.97 98

 

பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2019 பட்டியலில், முதல் 100 இடங்களில், தமிழ்நாட்டினைச் சார்ந்த 21 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றன.

ஆனால் பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2020 பட்டியலில், முதல் 100 இடங்களில், தமிழ்நாட்டினைச் சார்ந்த 18 பல்கலைக்கழகங்கள் தான் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முன்னேறவும், பெற்ற இடத்தைத் தக்க வைக்கவும் இன்னும்  முயற்சி செய்ய வேண்டும்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.