வாழைக்காய் புட்டு செய்வது எப்படி?

வாழைக்காய் புட்டு வாழைக்காயினைக் கொண்டு செய்யப்படும் தொட்டுக்கறி ஆகும்.

இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என எல்லா சாத வகைகளுக்கும் பொருத்தமானது.

இனி சுவையான வாழைக்காய் புட்டு செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 3 எண்ணம்

தேங்காய் – ¼ மூடி

வெள்ளைப் பூண்டு – 3 இதழ்கள் (மீடியம் சைஸ்)

மிளகாய் வற்றல் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 3 எண்ணம்

கறிவேப்பிலை – 2 கீற்று

கடுகு – ½ ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 2 ஸ்பூன்

வாழைக்காய் புட்டு செய்முறை

 ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வாழைக்காயை தோலுடன் போட்டு அவிய வைக்கவும்.

வாழைக்காய் முக்கால் பாகம் வெந்தவுடன் வெளியே எடுத்து ஆற வைக்கவும்.

 

அவித்து ஆற வைத்த வாழைக்காய்கள்
அவித்து ஆற வைத்த வாழைக்காய்கள்

 

 

தோல் உரித்த வாழைக்காய்கள்
தோல் உரித்த வாழைக்காய்கள்

 

தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கிச் சுத்தம் செய்து ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.

மிளகாய் வற்றலை காம்பு நீக்கி ஒன்றிரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.

வாழைக்காய் ஆறியதும் தோலினை உரித்து விட்டு இழைப்பானில் இழைத்துக் கொள்ளவும்.

 

அவித்து ஆற வைத்து இழைத்த‌ வாழைக்காய்கள்
அவித்து ஆற வைத்து இழைத்த‌ வாழைக்காய்கள்

 

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய விடவும்.

நல்ல எண்ணெய் காய்ந்ததும் உளுந்தம் பருப்பு, சதுரங்களாக்கிய சின்ன வெங்காயம், கடுகு, அலசி உருவிய கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

பின்னர் அதனுடன் நசுக்கிய வெள்ளைப் பூண்டினைச் சேர்த்து வதக்கவும்.

ஒரு நிமிடம் கழித்து துருவிய வாழைக்காய், கிள்ளிய மிளகாய் வற்றல், தேவையான உப்பு சேர்த்து ஒரு சேரக் கிளறி வதக்கவும்.

 

துருவிய வாழைக்காய்,மிளகாய் வற்றல்,உப்பு சேர்த்தும்
துருவிய வாழைக்காய்,மிளகாய் வற்றல்,உப்பு சேர்த்தும்

 

வாழைக்காய் வதங்கியதும் அடுப்பினை அணைத்து விட்டு அதனுடன் துருவிய தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிளறவும்.

 

தேங்காய் துருவல் சேர்த்ததும்
தேங்காய் துருவல் சேர்த்ததும்

 

 

வாழைக்காய் புட்டு
வாழைக்காய் புட்டு

 

சுவையான வாழைக்காய் புட்டு தயார்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் வாழைக்காயுடன் மஞ்சள் பொடி சேர்த்து புட்டு தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் மிளகாய் வற்றலுக்குப் பதில் பச்சை மிளகாய் சேர்த்து புட்டு தயார் செய்யலாம்.

– ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.