வெஜிடேபிள் புலாவ் செய்வது எப்படி?

வெஜிடேபிள் புலாவ் என்பது அருமையான கலவை சாத வகை ஆகும். இதனை எளிதில் வீட்டில் சுவையாகச் செய்து அசத்தலாம். இனி வெஜிடேபிள் புலாவ் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சம்பா அரிசி – 200 கிராம் (1 பங்கு)

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)

கேரட் – 50 கிராம்

முருங்கை பீன்ஸ் – 50 கிராம்

பச்சை பட்டாணி – 50 கிராம்

பச்சை மிளகாய் – 2 எண்ணம்

இஞ்சி – சுண்டு விரல் அளவு

வெள்ளை பூண்டு – 4 எண்ணம்

தண்ணீர் – 2 பங்கு

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

பட்டை – சுண்டு விரல் அளவு

கிராம்பு – 3 எண்ணம்

ஏலக்காய் – 2 எண்ணம்

அன்னாசிப் பூ – 1 எண்ணம்

முந்திரிப் பருப்பு – 8 எண்ணம்

வெஜிடேபிள் புலாவ் செய்முறை

அரிசியை கழுவி அரிசி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ½ மணி நேரம் ஊற வைக்கவும்.

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

கேரட், முருங்கை பீன்ஸை நீளவாக்கில் செவ்வகமாக வெட்டிக் கொள்ளவும்.

 

 

தேவையான காய்கறிகள்
தேவையான காய்கறிகள்

 

தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்

 

இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை காம்பு நீக்கி நேராகக் கீறிக் கொள்ளவும்.

கொத்த மல்லி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப் பூ சேர்த்து தாளிதம் செய்யவும்.

பின்னர் முந்திரிப் பருப்பு சேர்த்து வதக்கவும்.

 

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

 

ஒரு நிமிடம் கழித்து நறுக்கிய பெரிய வெங்காய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

 

வெங்காயம் சேர்த்து வதக்கும் போதுவெங்காயம் சேர்த்து வதக்கும் போது

 

வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி, வெள்ளைப்பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்கவும்.

 

இஞ்சி, வெள்ளைப்பூண்டு விழுதி சேர்த்ததும்.
இஞ்சி, வெள்ளைப்பூண்டு விழுதி சேர்த்ததும்.

 

பின்னர் அதனுடன்பச்சை பட்டாணி, முருங்கை பீன்ஸ், காரட் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

 

காய்கறிகள் சேர்த்து வதக்கும் போது
காய்கறிகள் சேர்த்து வதக்கும் போது

 

பின்னர் தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த அரிசியை சேர்த்து கிளறி குக்கரை மூடி விசில் போடவும்.

 

குக்கரை மூடும் முன்பு

 

குக்கரை மூடும் முன்பு அடுப்பினை மிதமான தீயில் 10 நிமிடங்கள் வைத்து குக்கரை அணைத்து விடவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும் நறுக்கிய கொத்தமல்லி இலை, நெய் சேர்த்து கிளறவும்.

சுவையான வெஜிடேபிள் புலாவ் தயார்.

இதனுடன் தயிர் வெங்காயம் சேர்த்து உண்ணலாம்.

 

சுவையான வெஜ் புலாவ்
சுவையான வெஜ் புலாவ்

 

குறிப்பு

புலாவிற்கு தேவையான இருமடங்கு தண்ணீருக்கு அரிசியை ஊறவைத்த தண்ணீரை அளந்து மீதத்திற்கு சாதா தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் அரிசியின் சத்து வீணாவது தடுக்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் காலிபிளவர், பேபிகார்ன், குடைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்தும் புலாவ் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.