ஆம வடை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு : 250 கிராம்
சின்ன வெங்காயம் : 50 கிராம்
பச்சைமிளகாய் : 6
உப்பு : தேவையான அளவு
இஞ்சி, கருவேப்பிலை, மல்லிச்செடி, தட்டிய மிளகு சிறிதளவு

 

செய்முறை

கடலைப்பருப்பை குறைந்தது மூன்று மணி நேரம் நனைய வைத்துக் களைந்து ஒரு வடிதட்டில் தட்டி தண்ணீரை வடிய வைக்க வேண்டும்.

பருப்புடன் தேவையான அளவு உப்பு, 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம், பட்டை சிறிது போட்டு தண்ணீர் சேர்க்காமல் முக்கால் பாகமாக ஆட்டி பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் 6, கருவேப்பிலை, மல்லிச்செடி போட்டு வைக்க வேண்டும்.

வாணலியில் எண்ணெயைக் காய வைத்து மாவில் சிறு உருண்டையாக எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தி எண்ணெயில் போட்டு நன்றாகச் சிவந்தவுடன் எடுக்கவும். சுவையான ஆம வடை தயார்.

கடலைப்பருப்புக்குப் பதில் பட்டாணிப் பருப்பை உபயோகித்தும் இதே மாதிரி சுடலாம்.