இனிப்பு ஆப்பம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

பச்சரிசி : 1 கிலோ
புழுங்கலரிசி : 1 கிலோ
உளுந்து : ½ கிலோ
வெந்தயம் : 2 ஸ்பூன்
வெல்லம் : 2 கிலோ
சோடா உப்பு : தேவையான அளவு

 

செய்முறை

அரிசி, உளுந்து, வெந்தயம் முதலியவற்றை 5 மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். மாவை அள்ளுவதற்கு முன்பு வெல்லம், ஏலக்காய் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

மாவை சில மணி நேரம் ஊற வைக்கவும். இதில் அரை டம்ளர் இளநீர் சேர்த்தால் சுவை கூடும். ஆப்பம் சுடப் போகும் சமயத்தில் மாவில் ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்க்கலாம்.

ஆப்பசட்டியை எண்ணெய் தடவி அடுப்பில் வைக்கவும். தோசை மாவு பதத்தைவிட சற்று தண்ணியாக மாவைக் கரைத்து, சட்டியில் ஊற்றி, சட்டியை இரண்டு கையால் பிடித்து சுழற்றவும். சட்டியின் உட்பக்கத்தில் மாவு பரவியதும் சட்டியை மூடவும். மிதமான வெப்பத்தில் ஆப்பம் வெந்து எழும்பி வரும். சுவையான இனிப்பு ஆப்பம் ரெடி!

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.