எதிர்விளைவு விதி

எதிர்விளைவு விதி (Law of reverse effect) என்று ஒரு விதி இயற்பியலில் உண்டு. எது மிகுதியாக உள்ளதோ அதன் எதிர்நிலை உடனே அங்கு ஏற்பட்டு விடும் என்பது தான் அவ்விதி. வெப்பம் அதிகமாகி புழுக்கம் தோன்றினால், உடனடியாக மழை பெய்து குளிர்ச்சி உருவாகும். அது போல் ‘ஒரு பொருள் மீது விருப்பம் அதிகமாக அதிகமாக, ஒரு நிலையில் அதன் மீது வெறுப்பு உண்டாகிறது என்கிறார்கள் உளவியலாளர்.

‘சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்பதும் இது தான். ஒன்றை விரும்பி, அது கிடைக்காத போது, வெறுப்பே வந்து விடும். ஒரு பாசமிகு தந்தை அவரது விருப்பத்துக்கு மாறாகத் தன்மகள் திருமணம் செய்தால், அவள் மீது கொண்ட அன்பு அப்படியே வெறுப்பாகிறது.

இனிப்பு மிகுதியானால், கசப்பாகும்’. கசப்பு மிகுதியானால் இனிப்பாகும்; இது ஒரு ஆச்சிரியமான இயல்பு. வாழ்க்கையும் இப்படித்தான்; பெரும் குடிகாரன் குடியை வெறுப்பதும்,  ஆஸ்திகன் நாஸ்திகன் ஆவதும், நாஸ்திகன் ஆஸ்திகன் ஆவதும், நண்பன் பகைவனாவதும், நம்பிக்கைக்கு உரியவன் துரோகியாவதும் இந்த எதிர்விளைவு விதி தான். இதனை நாம் அறிந்தால், வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆகவே எதிலும் தீவிரம் வேண்டாம்; நடுநிலையே மேலானது; நீட்டலும் வேண்டாம்; மழித்தலும் வேண்டாம்.

‘துன்பத்தின் எல்லை இன்பம்; இன்பத்தின் எல்லை துன்பம்’.

இரண்டும் கலந்த வாழ்க்கைக்கு ஈடில்லை.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.