என்னவள்

பருத்தியைக் காயைப் போல அவ சிரிச்சு நிக்குறா – நான்
பார்க்கும் போது உதட்ட சுழிச்சுப் போகுறா
திருட்டு முழியாலே என்னை திரும்பிப் பார்க்குறா – நான்
திரும்பிப்  பாக்குமுன்னே ஓடி ஒளியுறா (பருத்தி)

உருக்கி வச்ச வெண்ணெய் போல உருக வைக்குறா – நான்
உறங்கும் போதும் அவ பேரை உரைக்க வைக்குறா
நெருப்புப் போல கவலையெல்லாம் எரிக்க வைக்குறா – என்
நெஞ்சினிலே தென்றலாட்டம் குளிர்ந்து நிக்குறா (பருத்தி)

பருப்பு சோறும் நெய்யும் போல மணக்க வைக்குறா – நான்
பாடும் பாட்டில் இசையாக அவ இருக்குறா
சுறுசுறுப்பா என்னை இருக்க வைக்குறா – நான்
சொல்லும் கதையின் கருவாக இருக்குறா (பருத்தி)

துருப்பிடிக்கா தங்கம் போல மினுங்கி நிக்குறா – எனக்கு
துணையாக வரத்தானே காத்து கிடக்குறா
கரும்பாக இனிச்சிடத்தான் அவ இருக்குறா – என்
கரம்பிடிச்சி கூடவர காத்து கிடக்குறா (பருத்தி)

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.