காளான் குழம்பு செய்வது எப்படி?

காளான் குழம்பு என்றாலே தனி ருசிதான். அதிலும் இயற்கை காளானை வைக்கும் குழம்பு நம்மைச் சொக்கச் செய்யும்.

சுவையான காளான் குழம்பு செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

காளான் – 200 கிராம்

சின்ன வெங்காயம் – 150 கிராம்

பொரிகடலை – 25 கிராம்

உப்பு – தேவையான அளவு

மசால் தயார் செய்ய

கொத்தமல்லிப் பொடி – 2 ஸ்பூன்

சீரகப் பொடி – 1¼ ஸ்பூன்

மிளகாய் வற்றல் பொடி – 1½ ஸ்பூன்

மஞ்சள் பொடி – ¾ ஸ்பூன்

தேங்காய் – ½ மூடி (மீடியம் சைஸ்)

தாளிக்க

நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்

கடுகு – ¼ ஸ்பூன்

கறிவேப்பிலை – 3 கீற்று

உளுந்தம் பருப்பு – ¼ ஸ்பூன்

செய்முறை

காளானை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 

இயற்கை காளான்
இயற்கை காளான்

 

சிறுதுண்டுகளாக்கிய காளான்கள்
சிறுதுண்டுகளாக்கிய காளான்கள்

 

தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

பொரிகடலையை மிக்ஸியில் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும்.

 

தூளாக்கப்பட்ட பொரிகடலை
தூளாக்கப்பட்ட பொரிகடலை

 

கொத்தமல்லிப் பொடி, மிளகாய் வற்றல் பொடி, மஞ்சள் பொடி, சீரகப் பொடி, துருவிய தேங்காய், தேவையான தண்ணீர் சேர்த்து மசால் தயார் செய்து கொள்ளவும்.

 

தேவையான மசால்
தேவையான மசால்

 

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும்போது
தாளிதம் செய்யும்போது

 

பின்னர் அதில் சதுரங்களாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

 

வெங்காயத்தை வதக்கும்போது
வெங்காயத்தை வதக்கும்போது

 

வெங்காயம் ஓரளவு வதங்கியதும் அதனுடன் நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும்.

 

காளானைச் சேர்த்து வதக்கும்போது
காளானைச் சேர்த்து வதக்கும்போது

 

வதங்கிய வெங்காயம் மற்றும் காளான்
வதங்கிய வெங்காயம் மற்றும் காளான்

 

காளான் வதங்கியதும் அதில் மசால், தேவையான உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

 

மசால் சேர்த்ததும்
மசால் சேர்த்ததும்

 

குழம்பில் ஒரு கொதி வந்ததும் அடுப்பினை சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.

மசால் வாடை நீங்கியதும் அதில் பொரிகடலை மாவினை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறி அடுப்பினை அணைத்து விடவும்.

 

பொரிகடலை மாவினைச் சேர்த்ததும்
பொரிகடலை மாவினைச் சேர்த்ததும்

 

சுவையான காளான் குழம்பு
சுவையான காளான் குழம்பு

 

சுவையான காளான் குழம்பு தயார்.

குறிப்பு

கொத்தமல்லிப் பொடி, மிளகாய் வற்றல் பொடி, மஞ்சள் பொடி, சீரகப் பொடி ஆகியவற்றிற்குப் பதிலாக மசாலா பொடி 2¼ ஸ்பூன் சேர்த்து மசால் தயார் செய்யலாம்.

இயற்கை காளான் கிடைக்காதவர்கள் விருப்பமுள்ளவர்கள் கடையில் காளானை வாங்கியும் குழம்பு தயார் செய்யலாம்.

-ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.