கோதுமை பக்கோடா செய்வது எப்படி?

கோதுமை பக்கோடா மாலைநேரச் சிற்றுண்டிக்கு ஏற்றது. வழக்கமாக செய்யும் சிற்றுண்டி வகைகளான வடை, சமோசா, சுண்டல் ஆகியவற்றை விட இது வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியமானதாகவும் உள்ளது.

வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு சுவையான கோதுமை பக்கோடா செய்முறை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 400 கிராம்

பச்சரிசி மாவு – 100 கிராம்

சின்ன வெங்காயம் – 25 கிராம்

பச்சை மிளகாய் – 3 அல்லது 4 எண்ணம்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரித்தெடுக்கத் தேவையான அளவு

 

செய்முறை

முதலில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி கொள்ளவும். பின்னர் அதனை சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை காம்பு நீக்கி சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். கருவேப்பிலையை உருவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்

 

கோதுமை மாவு, பச்சரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக்கிக் கொள்ளவும். அதனுடன் சதுரங்களாக நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு தூள் உப்பினைக் கலக்கவும்.

பின் கலவையுடன் சிறிது சிறிதாக நீர் சேர்த்து பிசையவும். சப்பாத்திக்கு பிசைவது போல் உண்டையாக பிசையவும்.

மாவு பிசைந்தவுடன்
மாவு பிசைந்தவுடன்

 

பின் பெரிய உருண்டையிலிருந்து சிறிது சிறிதாக கிள்ளி தட்டில் வைத்துக் கொள்ளவும்.

மாவு துண்டுகள்
மாவு துண்டுகள்

 

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கிள்ளி வைத்துள்ள பக்கோடாக்களைப் போடவும்.

கோதுமை பக்கோடா வேகும் போது
பக்கோடா வேகும் போது

 

ஒரு பக்கம் வெந்ததும் பிரட்டி விடவும். பக்கோடா வெந்ததும் எடுத்து விடவும். இவ்வாறே கிள்ளி வைத்துள்ள பக்கோடாக்களை பொரித்தெடுக்கவும். சுவையான கோதுமை பக்கோடா தயார்.

கோதுமை பக்கோடா
கோதுமை பக்கோடா

 

இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் ரசித்து உண்பர். தேங்காய் சட்டினியுடன் இதனை சேர்த்து உண்ணலாம்.

வெங்காயம் சேர்த்திருப்பதால் இதனை ஒரு நாள் மட்டுமே வைத்திருந்து உண்ணவும்.

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாய்க்குப் பதில் மிளகாய் பொடி சேர்த்தும் பக்கோடா தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் இஞ்சி மற்றும் மல்லி இழை சேர்த்து பக்கோடா தயார் செய்யலாம்.

-ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.