திமுக‌ தேர்தல் அறிக்கை 2016

திமுக‌ தேர்தல் அறிக்கை 2016 – திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2016க்காக அளித்த தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்.

 

 

மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் கொண்டுவரப்படும்.

மதுவிலக்கு இழப்பை ஈடுகட்ட புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.

மது விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் கலைக்கப்படும்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

மதுவுக்கு அடிமையானோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

 

 

ஏழை எளிய மாணவர்களுக்கு தொழில் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்.

ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அறிஞர் அண்ணா உணவகங்கள் அமைக்கப்படும்.

ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் குறைக்கப்படும்.

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் உற்பத்தி செய்யும் பால் முழுவதும் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும்.

மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.

குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த 15 நாளில் ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டைகள் வழக்கப்படும்.

மாதத்தின் அனைத்து நாட்களிலும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

சிறு, குறு விவசாயக் கடன்கள் அடியோடு தள்ளுபடி செய்யப்படும்.

வேளாண்மைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும்.

வேளாண் பொருள்களை சந்தைப்படுத்த புதிய கொள்கைகள் கொண்டு வரப்படும்.

வேளாண் பொருள் உற்பத்தியாளர்கள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்வதற்கான வசதிகள் செய்து தரப்படும்.

நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ. 2,000-ஆக நிர்ணயிக்கப்பட்டு படிப்படியாக ரூ. 2,500-ஆக உயர்த்தப்படும்.

கரும்புக்கு டன் ஒன்றுக்கு வண்டிச்சத்தம் ரூ. 1,200 சேர்த்து ரூ. 3,500 வழங்கப்படும்.

நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் தொடங்கப்படும்.

கொடைக்கானலில் தோட்டக்கலை ஆய்வு மையம் அமைக்கப்படும்.

காஞ்சிபுரத்தில் பட்டுப்பூங்கா அமைக்கப்படும்.

கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணி நாள் 150-ஆக அதிகரிப்படும். 50 நாட்கள் விவசாயப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

ஊரக வேலைவாய்ப்பு கூலி ரூ.100 லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்படும்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.

மகளிருக்கு 9 மாதம் பேருகால விடுமுறை அளிக்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக்குழு அமைக்கப்படும்.

பணிக்காலத்தில் உயிரிழக்கும் அரசு பணியாளர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

உயிரிழந்த மக்கள் நல பணியாளர் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

25 ஆண்டுகள் பணி முடித்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும்.

தனியார் துறைகளில் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

அரசுத்துறையில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் விரைந்து நிரப்ப வழிவகை செய்யப்படும்.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 54,233 ஆசிரியர் பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படும்.

பகுதிநேர கணினி பயிற்சியாளர், ஓவிய, இசை ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும்.

படித்துவிட்டு வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும்.

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

திருச்சி, மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்

மதுரை முதல் தூத்துக்குடி வரை தொழிற்சாலைகளில் நிறைந்த நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.

சென்னை முதல் ஒசூர் வரையும் தொழிற்சாலைகள் நெடுஞ்சாலை திட்டம் கொண்டு வரப்படும்.

ஒரு லட்சம் பட்டதாரிகளுக்கு சுய தொழில் தொடங்க ரூ.1 லட்சம் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும்.

தொழில் முனைவோருக்கு 100 நாட்களில் ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்க வகை செய்யப்படும்.

கிரானைட், மணல் தாதுமணல் அகழ்வுத் தொழிலை 2 லட்சம் இளைஞர் பங்கேற்புடன் மேற்கொள்ளத் திட்டம் கொண்டு வரப்படும்.

முதியோர் உதவித் தொகை ரூ. 1,300-ஆக உயர்த்தப்படும்.

முதியோருக்கு கட்டணமில்லா பயணச்சலுகை வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு பாலுடன் கூடிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுக்கூடைத் திட்டம் தொடங்கப்படும்.

பட்டதாரிப் பெண்கள் கலப்பு திருமண உதவித் தொகையாக ரூ.60 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும்.

சாலையோர மக்களுக்கு இரவு நேர காப்பிடங்கள் அமைத்து தரப்படும்.

துப்புரவு தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்

மீண்டும் வருமுன் காப்போம் திட்டம் கொண்டு வரப்படும்.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்படும்.

அரசு சேவைகளை மக்கள் பெறுவதை உறுதி செய்ய சேவை உரிமை சட்டம் கொண்டு வரப்படும்.

வெள்ளத் தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும்.

மீனவ சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப்படும்; மீனவர்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

 சேது சமுத்திர திட்டம் மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

எம்.ஜி.ஆர். திரைப்பட நகர் புதுப்பொலிவூட்டப்படும்.

பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்.

பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்து திரும்பப்பெறப்படும்.

 வழக்குரைஞர்கள் சேமநல நிதி ரூ. 7 லட்சமாக உயர்த்தப்படும்.

******************

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.