நிலா

அமுதூட்டும் அன்னைதன்

அன்புக் குழந்தைக்கு நீ

விளையாட்டுப் பொருளானாய்

 

பேரக் குழந்தைகள் தூங்கிட

இரவில் பாட்டிகளுக்கெல்லாம்

கதைப் பொருளானாய்

 

தவணை முறையில் தினம்தினம் பார்த்துத்

தவிக்கும் இளங்காதலர்களுக் கெல்லாம்

தங்க முகமானாய்

 

அண்ட முழுவதும் ஆராயும்

அறிவியல் படிப்போர்க்கெல்லாம்

ஆராய்சிப் பொருளானாய்

 

என்போன்ற கவிஞர்க் கெல்லாம்

எழுதஎழுதக் குறையாத

இலக்கியப் பொருளானாய்

 

எல்லோரையும் விட தூரத்தில் இருக்கிறாய்

எல்லோர் உள்ளத்தில் இருக்கிறாய்

நிலவே நீ ஒரு விளங்கா இரகசியம்

– வ.முனீஸ்வரன்