பாசிப் பருப்பு பாயசம் செய்வது எப்படி?

பாசிப் பருப்பு பாயசம் என்பது பாசிப்பருப்பினைக் கொண்டு செய்யப்படும் ருசியான உணவாகும்.

விரத கால உணவில் மற்றும் வழிபாட்டிற்கான படையல்களில் இனிப்புக்காக செய்யப்படும் உணவாக இப்பாயாசம் பெரும்பாலும் செய்யப்படுகிறது. இது சுவையும் சத்தும் மிக்கது.

இனி எளிதான முறையில் பருப்பு பாயசம் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு – 100 கிராம்

மண்டை வெல்லம் – 200 கிராம்

தேங்காய் – ¼ மூடி (மீடியம் சைஸ்)

கிஸ்மிஸ் – 10 எண்ணம்

முந்திரிப் பருப்பு – 10 எண்ணம்

ஏலக்காய் – 3 எண்ணம்

நெய் – 2 ஸ்பூன்

 

செய்முறை

முதலில் பாசிப்பருப்பை வெறும் கடாயில் போட்டு வாசம் வரும் வரை வறுக்கவும்.

பாசிப் பருப்பை வறுக்கும்போது
பாசிப் பருப்பை வறுக்கும்போது

 

மண்டை வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும்.

தேங்காயை துருவிக் கொள்ளவும்.

பின் வறுத்த பாசிப்பருப்பினை குக்கரில் போட்டு பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைக்கவும்.

போதுமான தண்ணீருடன் பாசிப் பருப்பு
போதுமான தண்ணீருடன் பாசிப் பருப்பு

 

ஒரு விசில் வந்ததும் தணலை சிம்மில் வைத்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.

பின் குக்கரைத் திறந்து பருப்பை நன்கு மத்தால் கடைந்து விடவும்.

வேகவைத்து மசித்த பாசிப்பருப்பு
வேகவைத்து மசித்த பாசிப்பருப்பு

 

தூளாக்கி வைத்துள்ள மண்டை வெல்லத்தை பருப்பினைப் போல் மூன்று மடங்கு தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பினைப் போட்டு அத்துடன் வடிகட்டிய சர்க்கரைக் கரைசலைச் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அதனுடன் துருவிய தேங்காயைச் சேர்க்கவும்.

சர்க்கரைக் கரைசல் சேர்த்து கொதிக்கும்போது
சர்க்கரைக் கரைசல் சேர்த்து கொதிக்கும்போது

 

தேங்காய்ப்பூ போட்டவுடன்
தேங்காய்ப்பூ போட்டவுடன்

 

வாணலியில் நெய்யினை ஊற்றி முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் ஆகியவற்றை வறுக்கவும்.

நெய் உருக்கும்போது
நெய் உருக்கும்போது

 

கிஸ்மிஸ் முந்திரி வறுக்கும்போது
கிஸ்மிஸ் முந்திரி வறுக்கும்போது

 

வறுத்த பொருட்களை பாசாயக் கலவையில் கொட்டவும்.

ஏலக்காயை பாயாசத்தில் சேர்க்கவும்.

எல்லா பொருட்களையும் ஒரு சேரக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான பருப்பு பாயாசம் தயார். இதனை எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவர்.

பாசிப் பருப்பு பாயசம்
பாசிப் பருப்பு பாயசம்

குறிப்பு

பாசிப்பருப்பினை வேக வைக்கும்போது பருப்பானது சற்று மலர்ந்தால் போல் இருக்குமாறு எடுத்து விட வேண்டும். அதுவே பாயாசம் தயார் செய்ய சரியான பதம் ஆகும்.

விருப்பமுள்ளவர்கள் தேங்காய்க்குப் பதில் தேங்காய் பாலைப் பயன்படுத்தி பாயாசம் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.