புதினா புலாவ் செய்வது எப்படி?

புதினா புலாவ் எளிதில் செய்யக் கூடிய கலவை சாத வகைகளுள் ஒன்று. பொதுவாகவே புதினா புத்துணர்ச்சி அளிக்க கூடியது. இதனுடைய மணம் மற்றும் சுவை நிறைய பேருக்கு பிடித்தமான ஒன்று.

பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுத்து அனுப்புவது என்று யோசிப்பவர்களுக்கும், என்ன கொடுத்து அனுப்பினாலும் அப்படியே திருப்பிக் கொண்டு வந்து விடுகிறார்கள் என்பவர்களுக்கும் இது வரப்பிரசாதம்.

அதனால் புதினாவில் புலாவ் செய்து உண்ணுவது சுவையோடு நமக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும். ஏற்கனே புதினாவைப் பயன்படுத்தி துவையல் செய்யும் முறை பற்றி பதிவிட்டுள்ளேன்.

இனி எளிதாக சுவையான புதினா புலாவ் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்

 

சம்பா பிரியாணி அரிசி – கால் படி (400 கிராம்) (1 பங்கு)

புதினா – 1/2 கட்டு

கொத்தமல்லி இலை – 3 கொத்து

கறிவேப்பிலை -3 கீற்று

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)

தக்காளி – 2 எண்ணம் (பெரியது)

இஞ்சி – சுண்டு விரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 4 பற்கள் (பெரியது)

பச்சை மிளகாய் – 2 எண்ணம் (பெரியது)

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – 2 பங்கு

நெய் – 4 ஸ்பூன்

தாளிக்க

தாளிக்க தேவையானவை
தாளிக்க தேவையானவை

 

நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்

பெருஞ்சீரகம் – 1 1/2 ஸ்பூன்

பட்டை – ஆட்காட்டி விரல் அளவு

கிராம்பு – 1 எண்ணம்

ஏலக்காய் – ஒரு எண்ணம்

பிரிஞ்சு இலை – 1 எண்ணம் (சிறியது)

அன்னாசிப்பூ – 1/2 எண்ணம்

முந்திரிப் பருப்பு – 10 எண்ணம்

 

புதினா புலாவ் செய்முறை

புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை சுத்தம் செய்து அலசி எடுத்துக் கொள்ளவும்.

இஞ்சி, வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி சுத்தம் செய்யவும்.

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

தக்காளியை அலசி சிறிய துண்டுகளாக வெட்டவும்.

பச்சை மிளகாயை காம்பு நீக்கி அலசிக் கொள்ளவும்.

அரிசியை கழுவி வடித்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் அலசிய புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, வெள்ளைப் பூண்டு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

 

மிக்ஸியில் அரைக்கும் பொருட்களைச் சேர்த்ததும்
மிக்ஸியில் அரைக்கும் பொருட்களைச் சேர்த்ததும்

 

விழுதாக்கியதும்
விழுதாக்கியதும்

 

குக்கரை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய், பிரிஞ்சு இலை, அன்னாசிப்பூ, கிராம்பு சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்ததும்
தாளிதம் செய்ததும்

 

தாளிதத்துடன் முந்திரிப் பருப்பினை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

 

முந்திரியைச் சேர்த்து வதக்கும் போது
முந்திரியைச் சேர்த்து வதக்கும் போது

 

பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடிப் பதத்திற்கு வதக்கவும்.

 

வெங்காயத்தைச் சேர்த்ததும்
வெங்காயத்தைச் சேர்த்ததும்

 

அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளிளைச் சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.

 

தக்காளியைச் சேர்த்ததும்
தக்காளியைச் சேர்த்ததும்

 

பின்னர் அரைத்த புதினா கலவையைச் சேர்த்து ஒரு சேரக் கிளறி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

 

அரைத்த கலவையைச் சேர்த்ததும்
அரைத்த கலவையைச் சேர்த்ததும்

 

கலவையுடன் தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

 

தண்ணீர், உப்பு சேர்த்ததும்
தண்ணீர், உப்பு சேர்த்ததும்

 

தண்ணீர் கொதித்ததும்
தண்ணீர் கொதித்ததும்

 

கலவை கொதித்ததும் அரிசியைச் சேர்த்து, நெய் ஊற்றி கிளறி மூடியிட்டு விசில் போட்டு அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.

ஒரு விசில் வந்ததும் அடுப்பினை சிம்மில் இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்கி விடவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும் சாதத்தை வெளியே எடுக்கவும்.

 

குக்கரைத் திறந்ததும்
குக்கரைத் திறந்ததும்

 

சுவையான புதினா புலாவ் தயார்.

 

சுவையான புதினா புலாவ்
சுவையான புதினா புலாவ்

குறிப்பு

புதினாவும் உப்பினைக் கொண்டுள்ளதால் இதற்கு உப்பினை கவனமாகச் சேர்க்கவும்.

கால் படி அரிசிக்கு 1 1/2 கைபிடி சுத்தம் செய்த புதினா இலைகள் போதுமானது.

நாட்டு தக்காளி சேர்த்து புலாவ் தயார் செய்யதால் சுவை நன்றாக இருக்கும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.