புதிர் கணக்கு – 28

நண்பர்களே! உங்களுரில் புதிர் கணக்குகள் கேட்கப்படுவது போல எங்கள் ஊரிலும் சில வகை கணக்குகள் கேட்கப்படுவதுண்டு. அதையே நான் இப்போது கேட்கிறேன்; சரியான பதிலை யோசித்துச் சொல்லுங்கள் என்றது புல்புல் பறவை.

ஐயா எங்கள் நாட்டில் விலைவாசி மிகவும் குறைவு. விளைச்சல் அதிகம்.

அங்கே 1 கிலோ கோதுமையின் விலை ரூ1 என்றும்,

14கிலோ முள்ளங்கியின் விலை ரூ1 என்றும்,

ரூ15க்கு 2 கிலோ இறைச்சி என்றும் விற்கப்படுகின்றன.

ஆனாலும் மக்கள் அனைத்துப் பொருட்களையும் வாங்கி வருகின்றனர்.

ஒரு மனிதன் ரூ100க்கு 100 கிலோ பொருட்கள் வாங்கிச் சென்றதாகக் கூறினான். அப்படியானால் அவன் வாங்கிய பொருட்களில் ஒவ்வொன்றும் எத்தனை கிலோ இருந்திருக்கும் என்பதே இன்றைய என் கேள்வி” என்று கூறிவிட்டுப் பெருமிதத்துடன் தன் இடத்தில் அமர்ந்தது புல்புல் பறவை.

“பரவாயில்லையே நீங்க கூட நல்லாவே கணக்கு போடுறீங்க” என்று கரிகாலன் கழுகு பாராட்டியது. மேலும் “இந்தப் புதிருக்கு விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்” என்றும் தன் நண்பர்களிடம் கேட்டது.

“என் தம்பி சின்னான் இருந்தால் உடனே சொல்லியிருப்பான்” என்றது குருவி குறுமணி.

“இப்ப என்ன கெட்டுப்போச்சு நீ சென்று உன் தம்பியை அழைத்துவா! என்றது பருந்து பாப்பாத்தி

அதற்குள் அங்கு வந்த சேர்ந்த சின்னான் நடந்ததை கேள்விப்பட்டது. சிறிது நேரம் சிந்தித்து அங்கும் இங்கும் தாவியது. பிறகு ஒரு பதிலைக் கூறியது.

“சபாஷ் சரியான பதில்தான்” என்று சின்னான் சிட்டுக் குருவியைப் புல்புல் பறவை பாராட்டியதுடன் அதன் முதுகிலும் தட்டிக் கொடுத்தது.
ஏழாவது புதிருக்கான விடை

1கிலோ கோதுமை ரூ1 என்றும்
14கிலோ முள்ளங்கி ரூ1 என்றும்
2கிலோ இறைச்சி ரூ15 என்றும்
விற்கப்படுகிறதாம். அதில் ஒருவன் ரூ.100க்கு 100 கிலோ என்ற விகிதத்தில் மேற்கண்ட பொருளை வாங்கினால் ஒவ்வொன்றும் என்ன அளவு என்பதே கேள்வி. அதன்படி

2கிலோ இறைச்சி 15ரூபாய்க்கும்

14கிலோ முள்ளங்கி 1ரூபாய்க்கும்

84 கிலோ கோதுமை 84 ரூபாய்க்கும்

வாங்கியதாகச் சின்னான் கூறியது” என்றது வாணி வெளவால்.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.