முருகன் காவடி பாடல்கள்

தமிழ் கடவுளான முருகனை காவடி எடுத்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு காவடி எடுக்கும் போது பாடல்கள் பாடுவர். இப்பாடல்கள் முருகன் காவடி பாடல்கள் என்று அழைக்கப்படுகின்றன.

காவடியாம் காவடி

காவடியாம் காவடி

கந்தவேலன் காவடி

கண்கொள்ளாக் காட்சிதரும்

கடம்பனுக்குக் காவடி

 

வேல்முருகன் நாமத்திலே

விதவிதமாய் காவடி

வெற்றிவேலன் காவடி

வீரவேலன் காவடி

 

சிங்கார வேலனுக்கு

சின்னச் சின்னக் காவடி

வண்ணமயில் தோகையோடு

ஆடிவரும் காவடி

 

பழநிமலை பாலனுக்கு

பால்குடத்தால் காவடி

தென்பழநி வேலனுக்கு

தேன் குடத்தால் காவடி

 

சுவாமிநாத வேலனுக்குச்

சந்தனத்தால் காவடி

பாலசுப்பிரமணியனுக்கு

பஞ்சாமிர்தக் காவடி

 

ஆறுமுக வேலனுக்கு

அழகுமயில் காவடி

வண்ண வண்ணக் காவடி

வெற்றிவேலன் காவடி

 

மயூர நாதனுக்கு

மச்சத்தால் காவடி

குன்றக்குடி குமரனுக்கு

குறைவில்லாத காவடி

 

பக்தரெல்லாம் கொண்டாடும்

காவடியாம் காவடி

பாமாலை பாடிஆடி

நாடிவரும் காவடி

 

கண்கொள்ளாக் காட்சி தரும்

கந்தவேலன் காவடி

காவடியாம் காவடி

காணவேண்டும் கண்கோடி

 

 

 சின்னச் சின்ன காவடி

சின்னச் சின்னக் காவடி

செந்தில் நாதன் காவடி

வண்ண வண்ணக் காவடி

வள்ளிநாதன் காவடி

 

அங்கும் இங்கும் காவடி

அழகு வேலன் காவடி

இங்கும் அங்கும் காவடி

ஏர கத்தான் காவடி

 

ஆட்டம் ஆடும் காவடி

ஆண்டியப்பன் காவடி

பாட்டுப் பாடும் காவடி

பழநி யப்பன் காவடி

 

முன்னும் பின்னும் காவடி

முருக வேலன் காவடி

கண்ணும் மனமும் காவடி

கந்த வேலன் காவடி

 

இரத்தினவேல் காவடி

இன்ப மூட்டும் காவடி

பழநி மலைக் காவடி

பஞ்சந் தீர்க்கும் காவடி

 

சென்னி மலைக் காவடி

சேவற் கொடியோன் காவடி

தண்ணீர் மலைக் காவடி

தாகம் தீர்க்கும் காவடி

 

பாலும் பழமும் காவடி

பஞ்சாமிர்தக் காவடி

வேலும் மயிலும் காவடி

வினைகள் தீர்க்கும் காவடி

 

காவடிக்குள் ஆடிவரும் கந்தனையே பாருங்கள்

 

அரோகரா அரோகரா என்று சொல்லுங்கள்

ஆறுமுகன் பேரழகை பாடிச் செல்லுங்கள்

 

காவடிக்குள் ஆடிவரும் கந்தனையே பாருங்கள்

கவலையெல்லாம் தீர்ந்திடவே கந்தன் நாமம் சொல்லுங்கள்

 

சேவடியே சரணமென சேர்ந்து சொல்லுங்கள்

சிக்கலெல்லாம் தீர்ந்துவிடும் நின்று பாருங்கள்

 

காலையிலும் மாலையிலும் கந்தன் புகழ் பாடுங்கள்

வேலையோடு வேலவனை தொழுது வாருங்கள்

 

சோலைமலை வேலவனைச் சொல்லி சொல்லிப் பாடுங்கள்

சொர்க்க வாழ்வு கிடைத்திடவே சுப்ரமணியை நாடுங்கள்

 

பாலிலே குளிக்கின்ற பரம்பொருளைப் பாருங்கள்

பாலரின் காவடிக்கு பாட்டுப் பாட வாருங்கள்

 

சிங்கைநகர் அழகுதனை வியந்து பாருங்கள்

சீனரின் காவடியை கண்டு மகிழுங்கள்

 

பார்வதியின் பாலகனைப் பார்க்க வாருங்கள்

பாவமெல்லாம் நீங்கிடவே பகவான் நாமம் சொல்லுங்கள்

 

வேலை ஏந்தும் அழகுதனை வேடிக்கை பாருங்கள்

வெற்றிவேலன் திருமுகத்தை வேட்கையுடன் நாடுங்கள்

 

சோலையிலே வள்ளியினைச் சுமந்தவனைப் பாருங்கள்

பழத்துக்காக பழனி மலை சென்றவனை நாடுங்கள்

 

மயிலேறி சுற்றுக்கின்ற மாமணியைப் பாருங்கள்

மணக்கோலம் கொண்டவனை மாலையிட்டு வணங்குகள்

 

தனக்கெனவே ஓரிடத்தைப் பெற்றவனை பாருங்கள்

தங்கரதம் ஏறிவரும் பேரழகைப் பாருங்கள்

 

சிங்கைநகர் வேலவனின் சிரிப்பழகைப் பாருங்கள்

சிந்தனைக்கு செவிசாய்க்கும் சிங்காரனைப் போற்றுங்கள்

 

முருகன் காவடி பாடல்கள் பாடி மனமுருகி வழிபட்டு வாழ்வில் உன்னத நிலை அடைவோம்.

 

One Reply to “முருகன் காவடி பாடல்கள்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.