மேலாண்மை கல்லூரிகளின் தரவரிசை 2020

மேலாண்மை கல்லூரிகளின் தரவரிசை 2020 பட்டியலில், 75 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 8 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.

மத்திய அரசு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசை செய்து, 11.06.2020 அன்று பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தினை, சர்வதேச அளவில் உயர்த்துவதே இதன் நோக்கம் ஆகும்.

கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்ற அடிப்படையில், ஒவ்வொரு வருடமும் தரவரிசை தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.

2020-ஆம் வெளியிடப்பட்ட மேலாண்மை கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில், இந்திய மேலாண்மை நிறுவனம் அகமதாபாத், 82.75 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

இந்திய மேலாண்மை நிறுவனம் பெங்களூரு, 81.32 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்திய மேலாண்மை நிறுவனம் கொல்கத்தா, 80.39 பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

மேலாண்மை கல்லூரிகளின் தரவரிசை 2020

வரிசை எண் பெயர் மதிப்பெண் இடம்
1 இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 61.77 14
2 இந்திய மேலாண்மை நிறுவனம், திருச்சிராப்பள்ளி 60.79 15
3 கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட், சென்னை 55.80 23
4 தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி 50.49 35
5 பி.எஸ்.ஜி காலேஜ் ஆப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் 46.69 46
6 லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், சென்னை 46.51 50
7 வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை 45.89 55
8 அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 44.81 59

 

மேலாண்மை கல்லூரிகளின் தரவரிசை 2019  பட்டியலில், 75 இடங்களில், தமிழ்நாட்டினைச் சார்ந்த 10 மேலாண்மை கல்லூரிகள்  இடம் பெற்றன.

ஆனால் மேலாண்மை கல்லூரிகளின் தரவரிசை2020 பட்டியலில், 75 இடங்களில், தமிழ்நாட்டினைச் சார்ந்த 8 மேலாண்மை கல்லூரிகள் தான் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அளவில் தரவரிசைப் பட்டியலில் தமிழக மேலாண்மை கல்லூரிகள் தொடர்ந்து முன்னேறவும், பெற்ற இடத்தைத் தக்க வைக்கவும் இன்னும்  முயற்சி செய்ய வேண்டும்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.