ரத்தன் டாடாவின் வரிகள்

ரத்தன் டாடாவின் வரிகள் எளியவை; இனியவை.

ரத்தன் நோவல் டாடா இந்திய தொழில் அதிபர் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்.

அவர் இங்கிலாந்தின் தலைநகரான இலண்டனில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து சில நல்ல வரிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பயன் பெறுங்கள்.

 

உங்கள் குழந்தைகளை பணக்காரனாக இருக்க வேண்டும் என்று கூறாமல், எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறி வளருங்கள்.

அப்போதுதான் அவர்கள் வாழ்க்கையில், ஒரு பொருளின் விலையைப் பார்க்காமல், அதனுடைய மதிப்பினை உணர்வார்கள்.

 

உணவினை மருந்து போல் எண்ணி உண்ணுங்கள். இல்லையேல் மருந்துகளை நீங்கள் உணவாக உண்ண நேரிடும்.

 

நம்மை உண்மையாக நேசிப்பவர்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் நம்மை விட்டுக் கொடுப்பதற்கு 100 காரணங்கள் இருந்தாலும், நம்மைப் பிடித்துக் கொள்ள ஏதேனும் ஒரு காரணத்தைக் கண்டு பிடிப்பார்கள்.

 

சாதாரண மனிதனாக இருப்பதற்கும் மனித நேயத்துடன் இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஒரு சிலரே அதனைப் புரிந்து கொள்கின்றனர்.

 

நீங்கள் பிறக்கும்போது அன்பு செலுத்தப்படுவீர்கள். நீங்கள் இறக்கும்போதும் நேசிக்கப்படுவீர்கள். பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தை சரியாக நிர்வகிக்க வேண்டும்.

 

நீங்கள் வேகமாக நடக்க விரும்பினால் தனியாக நடக்கலாம்; ஆனால் வெகுதூரம் நடக்க விரும்பினால் ஒன்றாக சேர்த்து நடந்தாக வேண்டும்.

 

உலகத்தின் மிகச்சிறந்த ஆறு மருத்துவர்கள்

சூரிய ஒளி

சீரான ஓய்வு

உடல்பயிற்சி

கட்டுப்பாடன உணவு முறைகள்

தன்னம்பிக்கை

நண்பர்கள்

வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் மேற்கூறியவர்களைப் பராமரித்தால் ஆரோக்கியமான வாழ்வினை அனுபவிக்கலாம்.

 

நிலாவினைப் பார்க்கும்போது கடவுளின் அழகினை அதில் காணலாம்.

சூரியனைப் பார்க்கும்போது கடவுளின் சக்தியினை அதில் காணலாம்.

நீங்கள் கண்ணாடியைப் பார்க்கும்போது அதில் கடவுளின் சிறந்த

படைப்பினைக் காணலாம். எனவே உங்களை நம்புங்கள்.

நாம் அனைவரும் சுற்றுலாப் பயணிகள். கடவுளே அப்பயணத்தின் முகவர்.

நம்முடைய எல்லா பயண வழிகளையும், பயண முன்பதிவுகளையும், பயண இலக்குகளையும் அவர் ஏற்கனவே உறுதிபடுத்தியுள்ளார்.

எனவே பயண முகவரான கடவுளை நம்புங்கள்.

வாழ்க்கை எனப்படும் பயணத்தை அனுபவியுங்கள்.

 

ரத்தன் டாடாவின் வரிகள் உங்களை யோசிக்க வைக்கும்; சிறப்பாக வாழ வைக்கும் என நம்புகிறோம்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.