இயேசுபிரான் புகழ் பாட்டு

இயேசுபிரான் புகழ் பாட்டு

விலை மதிப்பிலா விண்ணக ராச்சியம்

வேண்டி னால்பிறர் நன்னலம் நாடுவீர்

அலையும் நெஞ்சை நல்வழியில் திருப்பினால்

அருகில் தோன்றிடும் நற்பர லோகமே

Continue reading “இயேசுபிரான் புகழ் பாட்டு”

நவக்கிரகங்களும் மனித வாழ்க்கையும்

நவக்கிரகங்களும் மனித வாழ்க்கையும்

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன், குருடு, செவிடு நீக்கிப் பிறத்தல் என்று தமிழ் மூதாட்டி ஒளவையார் கூறுகிறார்.

தமிழ் மொழியின் தலைசிறந்த பெண்பாற் புலவர் ஒளவையார் என்பது தமிழ் இலக்கிய வரலாறு கூறும் உண்மை ஆகும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அளவற்ற ஆற்றல்கள் பொதிந்து உள்ளன‌. அதை வெளிக்கொணர்வதுதான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.

Continue reading “நவக்கிரகங்களும் மனித வாழ்க்கையும்”

குங்கிலியக்கலய நாயனார் – இறைவனை நேராக்கியவர்

குங்கிலியக்கலய நாயனார்

குங்கிலியக்கலய நாயனார் சாய்ந்திருந்த சிவலிங்கத் திருமேனியை தன்னுடைய அன்பு என்னும் பாசக்கயிற்றால் நேராக்கிய வேதியர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர்.

சிவனிடம் இவர் கொண்டிருந்த மாறாத பேரன்பினை அறிந்து கொள்ள இவருடைய வரலாற்றைத் தொடர்ந்து படியுங்கள்.

குங்கிலியக்கலய நாயனார் சோழ நாட்டில் அமைந்திருந்த திருக்கடவூர் என்னும் ஊரில் பிறந்தார். திருக்கடவூர் இன்றைக்கு திருக்கடையூர் என்று அழைக்கப்படுகிறது. இது மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

Continue reading “குங்கிலியக்கலய நாயனார் – இறைவனை நேராக்கியவர்”