நல்ல நண்பர்கள் யார்? – சிறுவர் கதை

குட்டித் தவளை - சிறுவர் கதை

சோலையூரில் அழகிய குளம் ஒன்று இருந்தது. அக்குளம் நீரால் நிரம்பி வழிந்தது. அக்குளத்தில் தாமரை, அல்லி, குவளை போன்ற தாவரங்கள் காணப்பட்டன.

செந்தாமரை வெண்தாமரை மற்றும் குவளை மலர்களால் பகலிலும், செவ்வல்லி மற்றும் வெள்ளல்லி மலர்களால் இரவிலும் மிகவும் அழகாகக் குளம் காட்சியளித்தது.

அக்குளத்தில் அயிரை, கெண்டை, விரால், தங்கமீன் போன்ற மீன் வகைகளும், தவளைகளும் சந்தோசமாகச் சுற்றித் திரிந்தன.

அக்குளத்தில் சங்கு என்ற குட்டித் தவளை ஒன்று வசித்தது. அது மிகவும் அன்பானது. எல்லோரிடமும் மிகவும் நட்புடன் பழகும்.

Continue reading “நல்ல நண்பர்கள் யார்? – சிறுவர் கதை”

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

மாணவச் செல்வங்களே! நீங்கள் கல்வி கற்கிறீர்கள்.அதற்கு பெரிதும் துணை புரிவது யார்? உங்கள் தாயும் தந்தையும்!

மாதா, பிதா, குரு, தெய்வம் என வெகு காலம் முன்பே நம் முன்னோர்கள் மிகச் சரியாக வரிசைப்படுத்தியிருப்பது நீங்கள் அறிந்த ஒன்றே!

தாய் தந்தைக்குப் பிறகே மற்றவர்கள். எந்த நேரத்திலும், எக்காலத்திலும் உங்களை அரவணைத்துப் பாதுகாப்பவர்கள். உங்களுக்கு பக்கபலமாக இருப்பவர்கள். உங்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள்.

Continue reading “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!”

களிப்பூட்டும் கடற்கரை

களிப்பூட்டும் கடற்கரை

கடற்கரை அழகினைப் பாடிடுவோம் – கடற்

காற்று தரும்சுகம் நாடிடுவோம்

படர்மணற் பரப்பினில் கால்பதித்தே – பிணி

பறந்திட உடல்வளம் கூடிடுவோம்

Continue reading “களிப்பூட்டும் கடற்கரை”

புதிர் கணக்கு

புதிர் கணக்கு பாகம் ஒன்று

ஒரு காட்டில் விலங்குகள் தங்கள் குட்டிகள் அறிவாளிகளாக வளர வேண்டும் என்பதற்காகப் புதிர் கணக்கு போடுகின்றன. உங்களால் அந்த புதிர் கணக்குகளுக்கு விடை கண்டுபிடிக்க முடிகிறதா எனப் பாருங்கள்!

Continue reading “புதிர் கணக்கு”