பேபி உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?

பேபி உருளைக்கிழங்கு வறுவல்

பேபி உருளைக்கிழங்கு வறுவல் மிகவும் சுவையான தொட்டுக்கறி வகை ஆகும். இது எல்லா விதமான சாதத்துடனும் உண்ணப் பொருத்தமானது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி உண்பர். சுவையான இதனை விருந்தினர்களின் வருகையின் போது செய்து அசத்தலாம்.

இனி எளிய முறையில் சுவையான பேபி உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “பேபி உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?”

முருக நாயனார் – மாலையிட்டு இறைபதம் பெற்றவர்

முருக நாயனார்

முருக நாயனார் வேளை தவறாமல் மாலையிட்டு செய்த வழிபாட்டினால் இறைபதம் பெற்ற அந்தணர்.

முருக நாயனார் சோழ நாட்டில் திருப்புகலூர் என்னும் ஊரில் வேதியராகப் பிறந்தார். திருப்புகலூர் தற்போது நாகபட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

திருப்புகலூரில் உள்ள சிவலாயத்தில் மூலவர் அக்னிபுரீசுவரர்.

இவரைத் தவிர பூதேசுவரர், வர்த்தமானேசுவரர், பவிசுயேசுவரர் என்னும் திருநாமங்களைக் கொண்டு முறையே இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் மூன்று காலங்களின் தலைவனாக மூன்று சந்திகளில் சிவனார் அருளுகிறார்.

Continue reading “முருக நாயனார் – மாலையிட்டு இறைபதம் பெற்றவர்”

நீருடன் ஓர் உரையாடல் 9 – உவர் நீர்

உவர் நீர்

நாளை திங்கட்கிழமை.

‘நீர் தொழில்நுட்பவியல்’ குறித்து பாடம் எடுக்க வேண்டியிருந்தது. அதற்கான முன் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

குறிப்பாக, நீரில் இருந்து உப்புக்களை பிரித்தெடுக்கும் முறைகள் பற்றிய தகவல்களை வாசித்துக் கொண்டிருந்தேன்.

“வேலையா இருக்கியா? தண்ணி லாரி வந்திருக்கு. இரண்டு குடம் மட்டும் புடிச்சிட்டு வர்றீயா?” என்று அம்மா கேட்டார்.

“தோ, வர்றேன் மா” என்று கூறி விரைந்து சென்றேன்.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 9 – உவர் நீர்”

பூமத்திய ரேகை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

பூமத்திய ரேகை
பூமத்திய ரேகை அல்லது நிலநடுக்கோடு என்பது பூமியை குறுக்குவாக்கில் இரு சமதுண்டுகளாகப் பிரிக்கும் கற்பனைக் கோடு ஆகும். இக்கோட்டிலிருந்து வடதுருவமும் தென்துருவமும் சமதூரத்தில் இருக்கின்றன.

இக்கோடு புவியை வடஅரைக்கோளம், தென்அரைக்கோளம் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. இது பூஜ்ஜியம் டிகிரி அட்சரேகை என்று அழைக்கப்படுகிறது. இக்கோடு 5கிமீ அகலத்தில் குறிக்கப்படுகிறது.

Continue reading “பூமத்திய ரேகை பற்றி அறிந்து கொள்ளுங்கள்”