அழியும் பறவைகள்

பறவைகள்

சில மாதங்களுக்கு முன் எங்கள் வீட்டு வராண்டாவில் உள்ள ‘டியூப் லைட்’டில் இருந்த இடைவெளியில் இரண்டு குருவிகள் கூடு கட்டிக் குடியிருந்தன.

சில நாட்களில் மூன்று முட்டைகள் கூட்டில் இருந்தன. குருவிகள் அவற்றைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந்தன.

ஒரு சில தினங்களில் முட்டை பொரித்து, மூன்று குஞ்சுகள் கூட்டிற்குள் இருந்தன. குருவிகளின் நடவடிக்கையைப் பார்த்து ஒன்று தாய்க் குருவி, மற்றொன்று தந்தைக் குருவி என்று அறிந்தோம்.

நாங்கள் குடும்பத்துடன் வராண்டாவில் இருந்த நாள்களில்கூடக் குருவிகள் சிறிதும் அச்சம் அடையவில்லை; பாதுகாப்பு உணர்வோடு மகிழ்ச்சியாக இருந்தன. Continue reading “அழியும் பறவைகள்”

அட! தங்கமே……….. தங்கம்

தங்கம்

இந்தியாவில், கையில் கழுத்தில் கிடக்கும் நகையிலிருந்து, கோயில் கலசங்கள் முதல், சேலை ஜரிகை வரை தங்கம் இருக்கிறது.

தங்கத்தால் செல்போன் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தங்க பஸ்ப லேகியம் போன்ற மருந்துகளில் தங்கத்தைப் பயன்படுத்துகின்றனர்.

பல் போன பெரியவர்கள் தங்கத்தால் பல்செய்து மாட்டிக் கொண்டு சிரித்து மகிழ்கின்றனர்.

ஏழை அன்புத் தாய் தன் குழந்தையை என் தங்கமே…… பொன்னே! என்று அன்பு ஒழுகக் கொஞ்சி மகிழ்கிறாள்; தங்கள் பிள்ளைகளுக்குத் தங்கம், பொன், கனகம் எனப் பெயர் சூட்டி மகிழ்கின்றார். Continue reading “அட! தங்கமே……….. தங்கம்”

பூஜ்ஜியம் வழங்கிய ராஜ்ஜியம்

பூஜ்ஜியம்

இந்தியாதான் பூஜ்ஜியம் வழங்கிய ராஜ்ஜியம். கணித சாஸ்திரத்தில் கிரேக்கமும், இந்தியாவும் உலகிற்கு வழங்கிய நன்கொடைகள் ஏராளம்.

இந்திய வரலாற்றில் பழங்காலத்திலேயே ஆரிய பட்டரும், பிரம்ம குப்தரும், பாஸ்கரரும், புதையனாரும் இன்றைய கணித மேதைகளுக்கு வியப்பைத் தருகின்ற அளவிற்குப் பல்வேறு கணக்கீட்டு முறைகளையும், சூத்திரங்களையும், ஆய்ந்தவர்கள். Continue reading “பூஜ்ஜியம் வழங்கிய ராஜ்ஜியம்”

காந்தி – ஓர் உன்னத வழிகாட்டி

காந்தி

பொதுவாக, இளைஞர்கள் தமக்கென ஒரு முன்னோடியை ஊன்று கோலாக் கொண்டு வழிநடப்பார்கள். கிரேக்க நாட்டு இளைஞர்களுக்கு சாக்ரட்டீஸ் ஒரு கால கட்டத்தில் வழிகாட்டியாக விளங்கினார். Continue reading “காந்தி – ஓர் உன்னத வழிகாட்டி”

திருவள்ளுவர் தினம்

திருவள்ளுவர்

திருவள்ளுவர் என்ற முற்றும் அறிந்த ஞானியால் தமிழுக்கும் தமிழகத்திற்கும் மிகப்பெரிய பெருமை உலகளவில் கிடைத்திருக்கிறது . Continue reading “திருவள்ளுவர் தினம்”