மயிலிறகு உலகம்!

மயிலிறகு உலகம்

வீட்டுப்பாடம் செய்யாததால் ரமா டீச்சர் நோட்டை தூக்கி எறிந்ததில், நான் அதில் வைத்திருந்த சிறிய மயிலிறகு எங்கோ விழுந்து தொலைந்து விட்டது.

வீட்டுக்கு வந்து அக்காவிடம் அவள் வைத்திருக்கும் மயிலிறகை கேட்டதில் சண்டை வந்து அவள் என் தலையில் குட்ட, நான் அவளை திரும்பி அடிக்கும்போது அம்மா பார்த்து விட, “பொட்ட புள்ளையை கைநீட்டி அடிக்கிறாயே?” என்று முதுகில் விரல் ரேகை பதியும் அளவுக்கு இரண்டு அடியை போட்டு விட்டாள்.

இப்படி நாலா பக்கமும் அடி விழ நான் அழுது கொண்டே திண்ணையில் அமர்ந்திருந்தேன்.

ஒரு மயிலிறகு கேட்டது குற்றமாடா?

அப்போதுதான் திலகா அக்கா 16 வயதினிலே ஸ்ரீதேவி போல் துள்ளிக் குதித்து என் வீட்டுக்குள் வந்தாள். தன் வீட்டில் வாழைமரம் விழுந்து விட்டதால், வாழைத்தண்டை வெட்டி ஒரு பை நிறைய எடுத்துக்கொண்டு வந்திருக்கிறாள்.

Continue reading “மயிலிறகு உலகம்!”

காராம் பசுவும் கமலா மாமியும்

காராம் பசுவும் கமலா மாமியும்

காலை மணி பதினொன்று.

சமையலறையிலிருந்து ப்ளாஸ்டிக் பக்கெட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்த கமலா மாமி வாசல் கதவைத்திறக்க தாழ்ப்பாளைத் தொட்டபோது, டிவியில் ந்யூஸ் சேனல் பார்த்துக் கொண்டிருந்த ராமசுப்பு டிவியிலிருந்து கண்களை நகர்த்தி கழுத்தைத் திருப்பி, “கமலா எங்க போற?” என்று கேட்டார்.

Continue reading “காராம் பசுவும் கமலா மாமியும்”

சந்தேகம்!

“நம்ம பக்கத்து வீட்டு பார்வதியோட புருஷன் மும்பையிலிருந்து தினமும் போன் பண்ணி குறைஞ்சது பத்து நிமிஷமாவது பேசுவாராம். தினமும் அவகிட்ட பேசலையின்னா அவருக்கு தூக்கமே வராதாம், என் வீட்டுலயும் என் புருஷன் வெளியூருல இருக்கிறாரு, வாரத்துல ஒரு தடவ மட்டுந்தான் பேசறாரு” தனது தோழி மாலதியிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் ரேவதி.

Continue reading “சந்தேகம்!”

அம்மான்னா சும்மா இல்லடா!

கேஸ் அடுப்பின் பெரிய பர்னர் பக்கம் சாதம் ‘தளதள’ வென்று கொதித்துக் கொண்டிருக்க, சிறிய பர்னர் பக்கம் முட்டைகோஸ் பொரியல் வெந்து கொண்டிருந்தது.

Continue reading “அம்மான்னா சும்மா இல்லடா!”