விடுகதைகள் – விடைகள் – பகுதி 1

தென்னை மரம்

1. முப்பத்திரெண்டு சிப்பாய்; நடுவே மகராசா. அவர்கள் யார்?

பற்கள், நாக்கு

 

2. கை பட்டதும் சிணுங்குவான்; கதவு திறந்தால் அடங்குவான். அவன் யார்?

அழைப்பு மணி (காலிங்பெல்)

Continue reading “விடுகதைகள் – விடைகள் – பகுதி 1”

பள்ளி செல்லுவோம்

பள்ளி

பள்ளி செல்லுவோம்

பள்ளி செல்லுவோம்

படிப்போடு பண்பாடும் தரும்

பள்ளி செல்லுவோம்

 

துள்ளி செல்லுவோம்

துள்ளி செல்லுவோம்

துடிப்போடு துவளாமல் தினந்தினம்

துள்ளி செல்லுவோம் Continue reading “பள்ளி செல்லுவோம்”

யார் சீடன்? – சிறுகதை

யார் சீடன்

யார் சீடன் என்பது ஒரு நல்ல கதை. வாழ்வினை எப்படி அணுக வேண்டும் என்பதை நமக்குச் சொல்லிக் கொடுக்கும் அருமையான கதை. படியுங்கள்! பயன் பெறுங்கள்!

கரும்பையூர் என்ற ஊரில் சோமு, பாபு, கோபு என்ற நண்பர்கள் மூவர் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் தங்களுக்குக் குரு ஒருவரைத் தேர்வு செய்து அவரிடம் வாழ்க்கைக் கல்வி கற்க விரும்பினர்.

யாரிடம் கல்வி கற்பது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், தருப்பையூருக்கு அருகில் சம்பு என்றொரு சாது, ஆசிரம் அமைத்து வாழ்க்கைக் கல்வி கற்பிப்பதை கேள்வியுற்றனர். Continue reading “யார் சீடன்? – சிறுகதை”

உன்னத உறவு

உன்னத உறவு

சத்தமில்லாமல் அறையின் கதவை மெதுவாகத் திறந்தான் குமார். தந்தையின் சட்டைப் பையிலிருந்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை தெரியாமல் எடுத்து அறையிலிருந்து விரைந்தான்.

அவன் முகம் மழையில் நனைந்த மரம் மழைநீரைச் சொட்டுவது போல, பயத்தில் வியர்வை சொட்டுக்களை வெளியேற்றியது. இரவு நேரம் என்பதால் அமைதி சூழ்ந்திருந்தது. Continue reading “உன்னத உறவு”

மாணவர் – புதுக்குறள்

அரசுப்பள்ளி

பருவத்தில் சிறந்த பருவம் மாணவர்

பருவம் உலகின் உருவம்

 

கல்வி கருவறை பள்ளியின் வகுப்பறை

மாணவ பருவத்தின் முதலறை

 

வாழ்வில் சிக்கலிலா கோலத்தின் முதல்

புள்ளி மாணவர் பள்ளி Continue reading “மாணவர் – புதுக்குறள்”