மாவுக்கட்டு – சிறுகதை

மாவுக்கட்டு

சண்முகத்திற்கு வரன் பார்த்த எண்ணிக்கை, பெண் பார்க்கும் படலம் எல்லாம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் அளவுக்குப் போய் விட்டது.

காரணம் அவனுடைய கரடுமுரடான தோற்றம், முன் வழுக்கை, வீரப்பன் மீசை, சிவந்த கண்கள் இவையெல்லாம் அந்த பெண்களுக்கும், அவன் செய்யும் மத்திய போலீஸ் வேலை அந்தப் பெண்களின் பெற்றோர்களுக்கும் பிடிக்கவில்லை.

Continue reading “மாவுக்கட்டு – சிறுகதை”

தென்றலே – கவிதை

தென்றலே

தென்றல் காற்றே வந்திடுவாய் – நீ

தேன்தமிழ் இசையைத் தந்திடுவாய்

கொன்றை மலரெனச் சிரித்திடுவாய் – நீ

குளிர் நிலவொளியில் குளித்திடுவாய்

Continue reading “தென்றலே – கவிதை”

ஒரு காதல் கதை

ஒரு காதல் கதை‌

காதல் என்று மூன்று எழுத்துக்களில் சொல்லி விடுகிறோம். ஆனால் இருமனங்கள் அதற்காக போராடி பெரும் அவமானங்களுக்கும் அவப்பெயருக்கும் ஆளாகிறார்கள்.

முருகன் என்ற பையன் தேவகி என்ற பெண்ணை காதலித்த கதைதான் இது.

Continue reading “ஒரு காதல் கதை”

அப்பத்தா – சிறுகதை

அப்பத்தா

“அப்பத்தா, பரண்ல இருக்கிற உழக்க காணல” என்று கத்தினாள் மஞ்சு.

“நல்லா பாருத்தா, அங்கதான வைச்சேன். ஒருவேள உங்க ஐயன் காச எடுத்திட்டு உழக்க எங்கேயும் போட்டுட்டானோ? சரி, மரப்பீரோலு மேத்தட்டுல சேலைக்கு அடியில சின்ன பையில காசு வைச்சிருக்கேன். அத எடுத்து கொய்யாப் பழம் வாங்கு” என்றாள் செல்லம்மா.

“சரி, அப்பத்தா”

“இப்படிதான் என்னப் பாடாப் படுத்துறான். நாத்து நட்டு, கள பிடுங்கின்னு குறுக்கு ஒடிய காட்டு வேலைக்கு போயி, மாட்டுல பால் கறந்து வித்துன்னு, நாலு காசு பார்க்குறதுக்கு என்ன கஷ்டப்படுறேன். இந்த மனுசன் அதப் புரிஞ்சுக்காம, உழக்குல இருந்த காச எடுத்திட்டு, உழக்கையுமுல்ல காணாமப் போட்டுட்டான் பாரு தங்கம்” என்று மஞ்சுவின் அம்மாவிடம் புலம்பினாள் செல்லம்மா.

Continue reading “அப்பத்தா – சிறுகதை”