விளிம்பில் நிகழும் அற்புதங்கள் – சிறுகதை

விளிம்பில் நிகழும் அற்புதங்கள்

சுஜித்துக்கு இந்த உணவு டெலிவரி செய்யும் வேலை சுத்தமாக பிடிக்கவில்லை. அப்பா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இந்நேரம் எம் பி ஏ படித்து முடித்திருப்பான்.

எவ்வளவு வைத்தியம் பார்த்தும் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை. எம் பி ஏ இரண்டாவது செமெஸ்டரிலேயே அப்பா இறந்துவிட்டார். அப்பாவுடன் ஆஸ்ப்பிட்டலில் இருந்ததால் ஒரு சில பேப்பரை தவிர எல்லாமுமே அரியர்.

நீச்சல் தெரியாதவனை நடுக்கடலில் தூக்கி போட்டது போல், காலம் சுஜித்தை தூக்கி எறிந்து விட்டது. உடனடியாக இந்த வேலைதான் கிடைத்தது.

அப்பாவின் டூ வீலரை ஆசைக்கு கூட ஓட்டிப் பார்க்கத் தரமாட்டார். இப்போது மொத்த வாழ்க்கையும் இந்த டூ வீலரில் கழிகிறது.

Continue reading “விளிம்பில் நிகழும் அற்புதங்கள் – சிறுகதை”

மாவுக்கட்டு – சிறுகதை

மாவுக்கட்டு

சண்முகத்திற்கு வரன் பார்த்த எண்ணிக்கை, பெண் பார்க்கும் படலம் எல்லாம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் அளவுக்குப் போய் விட்டது.

காரணம் அவனுடைய கரடுமுரடான தோற்றம், முன் வழுக்கை, வீரப்பன் மீசை, சிவந்த கண்கள் இவையெல்லாம் அந்த பெண்களுக்கும், அவன் செய்யும் மத்திய போலீஸ் வேலை அந்தப் பெண்களின் பெற்றோர்களுக்கும் பிடிக்கவில்லை.

Continue reading “மாவுக்கட்டு – சிறுகதை”

பீனிக்ஸின் மிச்சங்கள் – சிறுகதை

பீனிக்ஸின் மிச்சங்கள்

தலைக்கு சுயமாக ” டை ” அடிப்பது பெரிய மகாபாரதம். இந்த கருமத்தை விட்டொழிக்க வேண்டும். ஆனால் ஒரு குடிகாரன் போல் இதற்கு அடிமையாகி மறுபடியும் வேஷம் கட்ட ஆரம்பித்து விடுகிறேன். இன்று காலையிலே கலர் போட்டாச்சு.

“உங்களை மணிமேகலை கூப்பிடுது. கூடையை தூக்கி தலையில் வைக்கனுமாம். கொஞ்சம் போயிட்டு வாங்க” என்றாள் மனைவி.

Continue reading “பீனிக்ஸின் மிச்சங்கள் – சிறுகதை”

தளர்வற்ற முத்தங்கள்

தளர்வற்ற முத்தங்கள்

காதலிப்பதே குற்றம் என்பதால்

முத்தங்கள் அந்த காலத்தில் கொலை பாதகம்.

கரம் பிடித்த பின்

மொத்தமாய் முத்தங்கள்.

காதலா காமமா ?

Continue reading “தளர்வற்ற முத்தங்கள்”

எழில் பிளாக் – சிறுகதை

எழில் பிளாக்

“எழிலரசியோட,  அட்டெண்டர் யாரு?” ஹாஸ்பிடல் நர்ஸ், சத்தமாக இரண்டு, மூன்று முறை கூப்பிட்டு விட்டாள்.

வெயிட்டிங் ரூமில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“வலிப்பு கம்ப்ளைன்ட் எழிலரசி, அட்டெண்டர் யார் ?” Continue reading “எழில் பிளாக் – சிறுகதை”