பூந்தி செய்வது எப்படி?

சுவையான பூந்தி

பூந்தி மிகப் பிரபலமான இனிப்பு வகைகளுள் ஒன்று. தீபாவளி பலகாரங்களில் பூந்தி கட்டாயம் இடம் பெறும்.

பூப்போல மெத் மெத் என்று இருக்கும் பூந்தி இனிப்பு பிரியர்களின் விருப்பமான நொறுக்குத் தீனி என்பதில் ஐயம் இல்லை.

வாயில் பல் இல்லாத வயதானவர்களின் முதல் தேர்வு பூந்திதான். இனி சுவையான பூந்தியை எப்படி செய்வது என்று பார்ப்போம். Continue reading “பூந்தி செய்வது எப்படி?”

கார வடை செய்வது எப்படி?

Kara Vadai

தேவையான பொருட்கள்

பச்சரிசி : 400 கிராம்
உளுந்தம் பருப்பு : 100 கிராம்
புழுங்கலரிசி : 25 கிராம்
வற்றல் : 3
உப்பு : தேவையான அளவு
கடலை எண்ணெய் : தேவையான அளவு
பெருங்காயம் : தேவையான அளவு
(கலர் வேண்டுமாயின் பஜ்ஜிப் பொடி சேர்க்கவும்)

 

செய்முறை

அரிசி இரண்டையும் ஒன்றாக நனைய வைக்கவும். உளுந்தை தனியாக நனைய வைக்கவும். அரிசியுடன் வற்றல், காயம், உப்பு சேர்த்து ஆட்டி வைக்கவும்.

எண்ணெயை காய வைத்து குழிவான கரண்டியால் மாவை ஊற்றி சிவந்ததும் எடுக்கவும். சுவையான கார வடை தயார்.

விரும்பினால் பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லிச்செடி கருவேப்பிலை கலந்து சுடலாம்.

 

இனிப்பு வடை செய்வது எப்படி?

Sweet Vadai

செய்முறை

¼ கிலோ உளுந்தம் பருப்பை ½ மணி நேரம் நனைய வைத்து, வடைக்கு ஆட்டிய மாதிரி ஆட்டி, 400 கிராம் சீனியைப் பாகு காய்ச்சி இறக்கி வைக்கவும்.

மாவைச் சிறு உருண்டையாக உருட்டி எண்ணெயில் சுட்டு சீனிப்பாகில் ஊற வைக்கவும். சுவையான இனிப்பு வடை தயார்.

 

ஆம வடை செய்வது எப்படி?

Aama Vadai

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு : 250 கிராம்
சின்ன வெங்காயம் : 50 கிராம்
பச்சைமிளகாய் : 6
உப்பு : தேவையான அளவு
இஞ்சி, கருவேப்பிலை, மல்லிச்செடி, தட்டிய மிளகு சிறிதளவு

 

செய்முறை

கடலைப்பருப்பை குறைந்தது மூன்று மணி நேரம் நனைய வைத்துக் களைந்து ஒரு வடிதட்டில் தட்டி தண்ணீரை வடிய வைக்க வேண்டும்.

பருப்புடன் தேவையான அளவு உப்பு, 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம், பட்டை சிறிது போட்டு தண்ணீர் சேர்க்காமல் முக்கால் பாகமாக ஆட்டி பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் 6, கருவேப்பிலை, மல்லிச்செடி போட்டு வைக்க வேண்டும்.

வாணலியில் எண்ணெயைக் காய வைத்து மாவில் சிறு உருண்டையாக எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்தி எண்ணெயில் போட்டு நன்றாகச் சிவந்தவுடன் எடுக்கவும். சுவையான ஆம வடை தயார்.

கடலைப்பருப்புக்குப் பதில் பட்டாணிப் பருப்பை உபயோகித்தும் இதே மாதிரி சுடலாம்.

 

தயிர் வடை செய்வது எப்படி?

Thayir Vadai

செய்முறை

உளுந்து வடை தயார் செய்யவும். பிறகு அதை வெந்நீரில் போட்டு, உடனே எடுத்து தயிரில் போடவும்.

தயிருடன் சேர்க்க வேண்டியவை
தயிர் : 200 கிராம்
தேங்காய் : ¼ மூடி
பச்சைமிளகாய் : 3
கடுகு : 1 டீஸ்புன்
உப்பு : சிறிதளவு

தேங்காய், பச்சை மிளகாய், உப்பு முதலியவற்றை மிக்சியில் அரைத்து தயிரில் கலக்கவும். அதனுடன் கடுகு தாளித்து கொட்டவும். தயிர் வடை ரெடி.