மதிய நேரம். வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. ‘மோர் குடித்தால் இதமாக இருக்கும்’ என்று மனதில் தோன்றியது.
சமையலறைக்குச் சென்றேன்.
சமையலறை மேடையிலிருந்த ஒரு கிண்ணத்தில் தயிர் இருந்தது. ‘மோர் குடிக்க வேண்டும்’ என்ற எண்ணம் இன்னும் மேலெழுந்தது.
உடனே, கலவைக்கருவி (மிக்சி) ஜாடியை எடுத்து அதில் தயிரை இட்டு, அத்தோடு சிறிதளவு நீரை சேர்த்து கலவைக்கருவியில் வைத்து இயக்கினேன். சில நொடிகளில் மோர் தயார் ஆனது.
Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்”