நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 26

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? - அத்தியாயம் 26

அந்த அறையில் மெல்ல சுற்றிக் கொண்டிருந்த சீலிங் ஃபேன் சீரான காற்றை பரப்பிக் கொண்டிருக்க, சுவரோரம் கிடந்த கட்டிலில் எலும்பும் தோலுமாய் படுத்துக் கிடந்தார் எழுபத்தி நான்கு வயது முதியவர்.

கண்கள் மூடியிருக்க மார்பு மட்டும் லேசாய் மேலும் கீழும் ஏறி இறங்கி அவர் உயிரோடிருப்பதை உறுதி செய்து கொண்டிருந்தது.

அவ்வப்போது நினைவு வருவதும், அப்படி நினைவு வரும்போதெல்லாம் உதடுகள் எதோ சொல்வதுபோல் அசைவதும் சட்டென நினைவு தப்பிப் போவதுமாய் கடந்த ஒன்னரை மாதமாக இப்படியான நிலைதான்.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 26”

பொன்னுத்தாய் – அம்மா என்னும் கடவுள்

பொன்னுத்தாய் - அம்மா என்னும் கடவுள்

மண் வாசனை, ஈரம் பதிந்த சாலை, சாலையோரத்தில் பாதாம் இலைகள், மேகம் முழுவதும் இருட்டு. நீ நினைக்கும் இருட்டல்ல, என் அம்மா சொல்வது போல் ‘கும் இருட்டு!!’

“இரு, அம்மா! அம்மா! அம்மா!”

Continue reading “பொன்னுத்தாய் – அம்மா என்னும் கடவுள்”

எனையும் தீண்டுமோ தென்றல்? – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

குளித்துவிட்டு ஹாலுக்கு வந்து சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள் செல்வி. மணி எட்டு என்பதைக் காட்டியது கடிகாரம்.

“அட! மணி எட்டாயிட்டே சீக்கிரம் கெளம்பணும். கொஞ்சம் லேட்டானாலும் சிடுமூஞ்சி சூப்பர்வைசர் சிங்காரம் ‘காள்காள்’னு கத்தும்” என்று வாய்விட்டுப் புலம்பியவாறே தன்னை சுடிதாருக்குள் நுழைத்துக் கொண்டாள் செல்வி.

நீலநிற பாராசூட் பிளாஸ்டிக் குப்பியிலிருந்து தேங்காய் எண்ணையை இடது கையில் கொஞ்சமாய்ச் சாய்த்து விட்டு எண்ணைக் குப்பியை எடுத்த இடத்தில் வைத்து விட்டு இருகைகளாலும் எண்ணையைப் ‘பரபர’வென்று தேய்த்து தலையில் தடவிக் கொண்டாள்.

Continue reading “எனையும் தீண்டுமோ தென்றல்? – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

பரிவு – எம்.மனோஜ் குமார்

பரிவு - கதை

தெருவில் தனிமையில் நடந்து கொண்டிருந்தான் குமார். அவன் வருகையை பார்த்ததும், தெரு நாய்கள் கோபத்தில் சத்தமிட்டு குரைத்தன.

Continue reading “பரிவு – எம்.மனோஜ் குமார்”