மயிலிறகு உலகம்!

மயிலிறகு உலகம்

வீட்டுப்பாடம் செய்யாததால் ரமா டீச்சர் நோட்டை தூக்கி எறிந்ததில், நான் அதில் வைத்திருந்த சிறிய மயிலிறகு எங்கோ விழுந்து தொலைந்து விட்டது.

வீட்டுக்கு வந்து அக்காவிடம் அவள் வைத்திருக்கும் மயிலிறகை கேட்டதில் சண்டை வந்து அவள் என் தலையில் குட்ட, நான் அவளை திரும்பி அடிக்கும்போது அம்மா பார்த்து விட, “பொட்ட புள்ளையை கைநீட்டி அடிக்கிறாயே?” என்று முதுகில் விரல் ரேகை பதியும் அளவுக்கு இரண்டு அடியை போட்டு விட்டாள்.

இப்படி நாலா பக்கமும் அடி விழ நான் அழுது கொண்டே திண்ணையில் அமர்ந்திருந்தேன்.

ஒரு மயிலிறகு கேட்டது குற்றமாடா?

அப்போதுதான் திலகா அக்கா 16 வயதினிலே ஸ்ரீதேவி போல் துள்ளிக் குதித்து என் வீட்டுக்குள் வந்தாள். தன் வீட்டில் வாழைமரம் விழுந்து விட்டதால், வாழைத்தண்டை வெட்டி ஒரு பை நிறைய எடுத்துக்கொண்டு வந்திருக்கிறாள்.

Continue reading “மயிலிறகு உலகம்!”

காற்றில் அலையும் காதல்!

காற்றில் அலையும் காதல்

முத்து மேஜருக்கு வயது 58. இன்னும் இரண்டு வருடத்தில் ரிட்டயர்மென்ட்.

முத்து மேஜர் கிடையாது. பட்டாளத்தில் சாதாரண சிப்பாய்தான். அந்த காலத்தில் எதுவும் பெரிதாய் படிக்கவில்லை, துறை ரீதியான தேர்வும் எழுதவில்லை என்பதால் சிப்பாயாகவே காலம் தள்ளி விட்டார்.

ஆனால் 35 வருட அனுபவம். எத்தனையோ குண்டு வெடிப்புகள், தீவிரவாதிகளுடன் மோதல் என்று முத்து பார்க்காத பிரளயம் இல்லை; உடல் முழுவதும் ஏகப்பட்ட தழும்புகள்.

முத்து துப்பாக்கி சுடுவதில் வல்லவர். கிலோ கணக்கில் பதக்கங்களை வைத்திருப்பவர் அதனால் வரை எல்லோரும் ‘மேஜர்’ என்று அழைக்கிறார்கள். அதிகாரிகளுக்கும் வர் மீது தனிப்பட்ட மரியாதை உண்டு.

Continue reading “காற்றில் அலையும் காதல்!”

அணை உடைந்த கதை – க.வீரமணி

“ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் போன்ற தொழில் நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் இந்த யுகத்தில், யாரோ மாடு மேய்க்கிற பெண் சாமி வந்து ஆடி அருள் வாக்கு சொல்வதை நம்பிக் கொண்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து உறுதியாகக் கட்டியுள்ள அணை உடைந்து விடும்; அதை தடுக்க வேண்டும் என்று ஒரு ஊரே திரண்டு வந்து மனு கொடுக்கும் இந்த அவலத்தை என்னவென்று சொல்வது?” என்று கலெக்டர் தலையில் அடித்துக் கொண்டார்.

Continue reading “அணை உடைந்த கதை – க.வீரமணி”

தீர்வும் தீர்வற்றதுமாய்…

காந்தி சிலைக்கு அருகில்
மதுக்கடை திறந்தார்கள்
ஊரைக் கூட்டிப் போராடினோம்
காந்தி சிலையை அகற்றி விட்டார்கள் – தீர்வு

Continue reading “தீர்வும் தீர்வற்றதுமாய்…”