முட்டை சமோசா செய்வது எப்படி?

முட்டை சமோசா, முட்டை விரும்பிகளுக்கு பிடித்தமான சிற்றுண்டி.

கோதுமை மாவினைப் பயன்படுத்தி, சுவையான முட்டை சமோசா செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 100 கிராம்

உப்பு – தேவையான அளவு

சின்ன வெங்காயம் – 50 கிராம்

முட்டை – 2 முட்டை

மிளகு பொடி – தேவையான அளவு

சீரகம் – ¼ ஸ்பூன்

நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்

கடலை எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு

செய்முறை

கோதுமை மாவில் இரண்டு ஸ்பூன் கடலை எண்ணெய் மற்றும் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் திரட்டிக் கொள்ளவும்.

ஈரத்துணியால் பிசைந்த மாவினை மூடி, அரைமணி நேரம் வைத்திருக்கவும்.

சின்ன வெங்காயத்தை பொடியான சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

சிறிதளவு கோதுமை மாவினை எடுத்துக் கொண்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பசைபோல் கலக்கிக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, நல்ல எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்க்கவும்.

சீரகம் பொரிந்ததும், சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

 

வெங்காயத்தை வதக்கும்போது
வெங்காயத்தை வதக்கும்போது

 

வெங்காயம் பாதி வதங்கியதும், முட்டை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு சேர்த்து ஒருசேரக் கிளறவும்.

 

முட்டையைச் சேர்த்ததும்
முட்டையைச் சேர்த்ததும்

 

உப்பு சேர்த்ததும்
உப்பு சேர்த்ததும்

 

பின்னர் அதனுடன் மிளகுப்பொடி போட்டு, முட்டையை நன்கு வதக்கிக் கொள்ளவும்.

 

மிளகுப்பொடி சேர்த்ததும்
மிளகுப்பொடி சேர்த்ததும்

 

முட்டைக் கலவை
முட்டைக் கலவை

 

பிசைந்த சப்பாத்தி மாவினை, சிறு உருண்டைகளாக்கவும்.

சிறு உருண்டையை கோதுமை மாவினைப் பயன்படுத்தி, மிகவும் மெல்லிய வட்ட சப்பாத்தியாக விரிக்கவும்.

இவ்வாறாக எல்லா உருண்டைகளையும் மெல்லிய சப்பாத்திகளாக விரிக்கவும்.

தோசை கல்லில் விரித்த சப்பாத்திகளை எண்ணெய் ஊற்றாமல், மேற்புறம் லேசாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

 

சுட்ட சப்பாத்திகள்
சுட்ட சப்பாத்திகள்

 

ஒவ்வொரு சப்பாத்தியையும் மூன்று துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

 

வெட்டப்பட்ட சப்பாத்திகள்
வெட்டப்பட்ட சப்பாத்திகள்

 

வெட்டிய துண்டினை கூம்பாக மடித்து, கோதுமை மாவு பசையினை வைத்து ஓரங்களை ஒட்டிக் கொள்ளவும்.

 

கூம்பாக மடிக்கும் போது
கூம்பாக மடிக்கும் போது

 

கூம்பிற்குள் வதக்கிய முட்டைக் கலவையை வைத்து, ஓரங்களில் கோதுமை மாவு பசையினைத் தடவி மூடிக்கொள்ளவும்.

இவ்வாறாக எல்லாவற்றையும் செய்யவும்.

 

முட்டை கலவையை உள்ளே வைத்ததும்
முட்டை கலவையை உள்ளே வைத்ததும்

 

எண்ணெயில் பொரிக்க தயார் நிலையில் கூம்புகள்
எண்ணெயில் பொரிக்க தயார் நிலையில் கூம்புகள்

 

வாணலியை அடுப்பில் வைத்து, கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சமோசாக்களைப் பொரித்துக் கொள்ளவும்.

சுவையான முட்டை சமோசா தயார்.

சுவையான முட்டை சமோசா
சுவையான முட்டை சமோசா

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி, முட்டைக் கலவையில் சேர்த்து ஸ்டப்பிங் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.